Published:Updated:

உத்தவ் தாக்கரே கூட்டிய கூட்டத்தில் 7 எம்.பி-க்கள் ஆப்சென்ட்... ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு யாருக்கு?!

உத்தவ் தாக்கரே

ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரை ஆதரிக்க சிவசேனா எம்.பி-க்கள் முடிவுசெய்துள்ளனர்.

உத்தவ் தாக்கரே கூட்டிய கூட்டத்தில் 7 எம்.பி-க்கள் ஆப்சென்ட்... ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு யாருக்கு?!

ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரை ஆதரிக்க சிவசேனா எம்.பி-க்கள் முடிவுசெய்துள்ளனர்.

Published:Updated:
உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்த பிறகு சிவசேனாவைக் கைப்பற்ற அதிருப்தி கோஷ்டி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முயன்றுவருகிறார். இந்தப் பிரச்னை இப்போது உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றிருக்கிறது. மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியை சபாநாயகர் உண்மையான சிவசேனாவாக அங்கீகரித்திருக்கிறார். தற்போது ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்ற கேள்வி சிவசேனா எம்.பி-க்கள் மத்தியில் எழுந்துள்ளது.

யஷ்வந்த் சின்ஹா, திரௌபதி முர்மு
யஷ்வந்த் சின்ஹா, திரௌபதி முர்மு

இது குறித்து விவாதிப்பதற்காக உத்தவ் தாக்கரே தனது கட்சி எம்.பி-க்கள் கூட்டத்தை தனது வீட்டில் கூட்டியிருந்தார். இதில் மக்களவையில் சிவசேனாவுக்கு மொத்தமுள்ள 19 எம்.பி-க்களில் 12 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் ஜனாதிபதி தேர்தலில் யஷ்வந்த் சின்ஹாவை ஆதரிக்க வேண்டும் என்று தெரிவித்தார். ஆனால் பெரும்பாலான எம்.பி-க்கள் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். இவ்விவகாரத்தில் அதிகப்படியான எம்.பி-க்கள் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை ஆதரிக்க முடிவு செய்ததால் கொறடா உத்தரவு எதையும் பிறப்பிப்பதில்லை என்று முடிவுசெய்யப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

எம்.பி-க்களின் விருப்பத்தை மீறி உத்தவ் தாக்கரேயால் எந்தவித முடிவும் எடுக்க முடியவில்லை. கூட்டம் முடிந்த பிறகு சஞ்சய் ராவத் பத்திரிக்கையாளர்களைச் சந்திக்காமல் சென்றுவிட்டார். கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த மூத்த தலைவர் கஜானன் கீர்த்திகர், ``சில எம்.பி-க்களுக்கு உடல்நிலை சரியில்லை. மேலும் சிலரால் உடனே மும்பை வந்து சேர முடியவில்லை. கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முர்மு பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்குப் பெரும்பாலான சிவசேனா எம்.பி-க்கள் ஆதரவு தெரிவித்தனர். இந்தத் தேர்தல் தொடர்பாக கொறடா உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. இவ்விவகாரத்தில் கட்சித் தலைவர் இரண்டு நாளில் தனது முடிவை அறிவிப்பார்” என்று தெரிவித்தார்.