Published:Updated:

``காங்கிரஸுக்கும், பாஜக-வுக்கும் 70 ஆண்டுகால பகை உள்ளது” - கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி

காங்கிரஸுக்கும்  - பா.ஜ.கவுக்கும் 70 ஆண்டுகால பகை உள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசினார்.

``காங்கிரஸுக்கும், பாஜக-வுக்கும் 70 ஆண்டுகால பகை உள்ளது” - கே.எஸ்.அழகிரி

காங்கிரஸுக்கும்  - பா.ஜ.கவுக்கும் 70 ஆண்டுகால பகை உள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசினார்.

Published:Updated:
கே.எஸ்.அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரியின் 71-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. சத்தியமூர்த்தி பவனில் உள்ள அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த பிறந்தநாள் விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த, அவரின் ஆதரவாளர்கள் கே.எஸ்.அழகிரிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஒரு சிலர் கேக் வெட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். `காங்கிரஸும் - மதச்சார்பின்மையும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் பேசிய கே.எஸ்.அழகிரி, ``எங்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் நமது கொள்கைகளை கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகத் தான் இந்த கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வலிமை வாய்ந்த ஆங்கிலேயர்களை எதிர்த்து நாம் போராடினோம். அப்போது காந்தி அகிம்சை என்னும் ஆயுதத்தை, அனைவருக்கும் கொடுத்தார். எனவே தான் நம்மால் அன்று வெற்றி பெற முடிந்தது. இன்று மதச்சார்பின்மை என்பதை ஆர்.எஸ்.எஸ்ஸும், பா.ஜ.க-வும் வேறு வழியில் கையாள்கிறது. அவர்கள் தான் இந்து மதத்திற்கு அத்தாட்சி என்பது போலவும், காங்கிரஸ் கட்சி எதிரானது என்பது போலவும், இந்து கடவுள்களுக்கு எதிராக இருப்பது போலவும் தொடர்ந்து சித்தரிக்கிறார்கள். இது உண்மையல்ல.

காந்தி
காந்தி

காங்கிரஸ் கட்சி தான் இந்து மதத்தை தூக்கிப்பிடித்த கட்சி. இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான ஒரு அரசாங்கம் நடக்கிறது. அதன் விளைவு அந்த நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, மக்கள் தமிழ்நாட்டில் இருந்து செல்லும் அரிசியை சாப்பிடுகிறார்கள். பிரிவினைவாதம், மத எதிர்ப்பு, மொழி எதிர்ப்பு  பேசுகிறவர்கள் காலப்போக்கில் தோல்வி அடைவார்கள்.

ஆரம்பத்தில் அவர்களுக்கு வரவேற்பு இருக்கும். ஆர்.எஸ்.எஸ் இன்று அதை தான் செய்கிறார்கள்.  மதத்தின் பெயரால் நம்மை வீழ்த்த முடியுமா என்று பார்க்கிறார்கள்.  ஆர்.எஸ்.எஸ்-ல் இருப்பவர்கள் தான் ஆங்கிலேய அரசிடம் நெருக்கத்தை பெற்றார்கள். அனுதாபத்தை பெற்றிருந்தார்கள். அப்போது நாடு பிரிவினை பெற்றால் இஸ்லாமியர்களுக்கு எப்படி பாகிஸ்தானை கொடுத்தீர்களோ அப்படி இந்தியாவை இந்துக்களின் கையில் கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

ஆர்.எஸ்.எஸ்
ஆர்.எஸ்.எஸ்

அந்த காலத்தில் சுதந்திரப் போராட்ட தலைவர் மகாத்மா காந்தி தான். பொது மக்களின் ஏகோபித்த தலைவர் என்றாலும் மகாத்மா காந்தி தான். எனவே ஆங்கிலேயர்களால் மகாத்மாவை மீறி ஆர்.எஸ்.எஸ்-ன் கையில் இந்த நாட்டின் சுதந்திரத்தை இந்த நாட்டின் கையில் வழங்க முடியவில்லை. 70 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸிடம் அடைந்த தோல்விக்காக என்று எப்படியாவது இந்தியாவை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக கடுமையாக போராடி வருகிறார்கள். காங்கிரஸுக்கும் - ஆர்.எஸ்.எஸ்,   காங்கிரஸுக்கும் - பா.ஜ.கவுக்கும் 70 ஆண்டுகால பகை உள்ளது” என்றார்.

பிறகு அவர் அளித்த பேட்டியில், "கம்பர், பாரதியார், பாரதிதாசன் போன்றவர்களால் தமிழகத்தில் தமிழ் வாழ்ந்து வருகிறது. தமிழகத்தின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் தமிழகத்தில் துணைவேந்தர் நியமனத்துக்கு ரூ.50 கோடி அளவுக்கு ஏலம் போனதாக தெரிவித்திருக்கிறார். இது அ.தி.மு.க ஆட்சியில் கொள்ளை அடித்தார்கள் என்பதை காட்டுகிறது. கொள்ளையடிக்கப்பட்டதால் அ.தி.மு.க ஆட்சி அப்புறப்படுத்தப்பட்டது என்பது தெரிகிறது.

பன்வாரிலால் புரோஹித்
பன்வாரிலால் புரோஹித்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிகாரிகள் பொறுப்பு அல்ல. அப்போதைய அரசாங்கம் நடத்தியவர்கள் தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையோடு அறிவிக்கப்பட்ட மற்ற மருத்துவமனைகள் எல்லாம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டு விட்டது. அண்ணாமலை   எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்திற்கு வாங்கி கொடுப்பாரா?" என்றார்.