Published:Updated:

அகிலேஷ் யாதவ், சமாஜ்வாதி கட்சியின் வெள்ளி விழாவில் பங்கேற்பது சந்தேகம்?

Vikatan Correspondent
அகிலேஷ் யாதவ், சமாஜ்வாதி கட்சியின் வெள்ளி விழாவில் பங்கேற்பது சந்தேகம்?
அகிலேஷ் யாதவ், சமாஜ்வாதி கட்சியின் வெள்ளி விழாவில் பங்கேற்பது சந்தேகம்?

உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், தனது தந்தைக்கு எழுதியுள்ள கடிதத்தில், தான் அக்டோபர் மூன்று முதல், அடுத்த வருடம் நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான 'ரத யாத்திரை' பிரசாரத்தில் ஈடுபடப்போவதாக கூறியுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர்  ஐந்தாம் தேதி சமாஜ்வாதி கட்சியின் வெள்ளி விழா நடக்க உள்ள நிலையில், அகிலேஷ் இப்படி கூறியுள்ளது அவர் கட்சியின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் பங்கேற்பாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அகிலேஷ் யாதவ், சமாஜ்வாதி கட்சியின் வெள்ளி விழாவில் பங்கேற்பது சந்தேகம்?


முன்னதாக, அகிலேஷின் மாமாவும், முலாயம் சிங்கின் தம்பியுமான ஷிவ்பால் யாதவை கட்சியின் தலைவராக நியமித்தபோதிலிருந்து அகிலேஷுக்கும் முலாயமுக்கும் இடையே பிரச்னைகள் ஏற்பட்டதாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், அகிலேஷ்  கட்சியின் வெள்ளி விழா நடக்கவுள்ள நிலையில் ரத யாத்திரை பிரசாரத்தில் ஈடுபடப்போவதாக கூறியிருக்கிறார்.