Published:Updated:

லோக் பால் சட்டத்தின் கொழுப்புச் சத்து உறிஞ்சப்படுகிறதா?

லோக் பால் சட்டத்தின் கொழுப்புச் சத்து உறிஞ்சப்படுகிறதா?

லோக் பால் சட்டத்தின் கொழுப்புச் சத்து உறிஞ்சப்படுகிறதா?

லோக் பால் சட்டத்தின் கொழுப்புச் சத்து உறிஞ்சப்படுகிறதா?

Published:Updated:
##~##

மீண்டும் ஒரு பட்டினிப் போராட்டத்தை நடத்தி முடித்து​விட்டார் அண்ணா ஹஜாரே. இந்த முறை டெல்லி ஜந்தர் மந்தரில் அல்ல... காந்தியாரின் நினைவிடமான ராஜ்காட்டில்! 

முதல் முறையாக ஊழலுக்கு எதிராகப் பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கி, 'லோக்பால் சட்டத்தில் மாற்றங்கள் வேண்டும்’ என்று அரசை ஆட்டம் காணச் செய்து வெற்றி பெற்றவர் ஹஜாரே. அவருடன் சாந்தி பூஷண், பிரசாந்த் பூஷண், அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட சமூக ஆர்வலர்களை உள்ளடக்கிய குழு ஒன்றையும், அமைச்சர்கள் கபில்சிபல், ப.சிதம்பரம் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு குழுவையும் உருவாக்கி, 'லோக்பால் சட்ட மசோதா’ எனும் கோதாவில் இறக்கிவிட்டது 'கை’ங்கர்ய அரசு! தொடர்ந்த பேச்சுவார்த்தைகள்... பிரதமரைக்கூட இந்தச் சட்டத்தின் கீழ் விசாரிக்க இயலும் என்பது வரையிலான

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

லோக் பால் சட்டத்தின் கொழுப்புச் சத்து உறிஞ்சப்படுகிறதா?

லோக்பால் சட்டத்தின் ஒவ்வொரு பல்லையும் பிடுங்க ஆரம்பித்த நிலையில், கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற லோக்பால் சட்ட வரைவு கூட்டத்தில் இருந்து வெளிநடப்புச் செய்தார் ஹஜாரே. ஏன் ஹஜாரே வெளிநடப்புச் செய்தார்? என்னதான் நடக்கிறது?

ஒவ்வொரு நாளும் பன்னாட்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றுடன் பல விதமான ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகளில் கையெழுத்து இடுகிறது அரசு. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எல்லாவற்றுக்கும் பின்னால், பணம் படைத்தவர்களின் ஆளுமை மேஜைக்கு அடியிலும், சிகப்பு நாடாவிலும் கோக்கப்பட்டு நடந்து வருகின்றன.

உதாரணத்துக்கு, கர்நாடக மாநிலத்தில் இருக்கும் சுரங்கங்களில் இருந்து 90 சதவிகிதத்துக்கும் அதிகமாக லாபம் ஈட்ட முடியும். அதே சமயம், 'பெரும் அளவில் ஊழலும் நடக்கும்’ என்று கர்நாடக லோகாயுக்தா சுட்டிக் காட்டியது. அதை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் ஆ.ராசா, லஞ்சம் வாங்கிக்கொண்டு எந்த ஒரு பொது ஏலமும் விடாமல்தனியாருக்கு 10 சதவிகிதத்துக்கும் குறைவான சந்தை மதிப்பில் அதைத் தாரை வார்த்து விட்டார். அது தொடர்பாக விசாரணைகள் நடக்கின்றன. இருந்தாலும், 'வெளிப்படைத்தன்மை’ சுத்தமாக இல்லை. இதுபோன்ற பல குற்ற வழக்குகளை விசாரிப்பது சி.பி.ஐ-யின் கைகளில் விடப்பட்டு இருக்கிறது. ஆனால், அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் இந்த அமைப்பே, சமயங்களில் ஊழலின் சிகரமாக இருக்கிறது. சி.பி.ஐ-யை மேற்பார்வை செய்ய வேண்டிய பொறுப்பு மத்திய ஊழல் ஒழிப்பு ஆணையத்துக்கு இருக்கிறது. ஆனால், பி.ஜே.தாமஸ் போன்றவர்களின் நியமனமே ஊழல் மூலமாகத்தான் நடைபெற்றது என்பதே பெரிய இழுக்கு!

இவை போன்ற பல ஊழல் குற்றச்சாட்டுகளை மிகுந்த சிரத்தையுடனும், கண்ணியத்துடனும் விசாரிப்​பதற்காகவே லோக்பால் சட்டம் வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். ஊழல் நடந்திருக்கிறது என்று தெரிந்தால்... பிரதமராக இருந்தாலும் விசாரிப்பது, விசாரணைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு கீழ் வராத அனைத்தையும்கூட விசாரிப்பது, அளிக்கும் தீர்ப்புகளை மீளாய்வு செய்ய உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்களுக்கு மட்டுமே அனுமதி அளிப்பது, லோக்பால் சட்டக் குழுவில் இருக்கும் உறுப்பினரே தவறு செய்தால், உச்ச நீதிமன்றத்தின் ஐவர் குழு மட்டுமே விசாரித்து வெளியேற்றுவது... என இப்படி முக்கியமான விதிகளைக்கொண்டது லோக்பால் சட்டம். ஆனால், ஆட்சியாளர்கள் யாரேனும் தங்கள் தலையில் தாங்களே மண் அள்ளிப் போட்டுக்கொள்ள ஒப்புவார்களா?

பெண்களுக்கு 33 சதவிகித சட்ட மசோதா, ஓரினச் சேர்க்கையாளர் சட்ட மசோதா, வெளிநாட்டுப் பல்கலைக்கழக அனுமதி சட்ட மசோதா, விதை மசோதா, பூச்சிக்கொல்லி மருந்து தடை மசோதா போன்ற எல்லாம் இன்று வரை கிடப்பில் கிடக்கின்றன. அப்படியே, 'இந்த லோக்பால் சட்ட மசோதாவையும் கிடப்பில் போட்டுவிடலாம்’என்று அரசு நினைக்க... அந்த நினைப்பில் நெருப்பைக் கொட்டுகிறது அகில இந்திய அளவில் அண்ணா ஹஜாரே, ராம்தேவ் நடத்துவதும், தமிழக அளவில் மாயாண்டி பாரதி, தமிழருவி மணியன் போன்றவர்களின் பட்டினிப் போராட்டங்களும்!

இந்த சட்டத்தால் ஊழல் மறைந்துவிடுமா? சந்தேகம்தான்! ஆனால், ஒரு நல்ல மாற்றத்துக்​கான முதல்படியாக இந்தச் சட்டம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டால், தேர்தல் சீர்திருத்தங்கள் தொடங்கி, அரசு இயந்திரத்தின் அனைத்துப் பற்களும் சுத்தம் செய்யப்படும். இந்த சட்டம் தொடர்பாக ஹஜாரே குழு தேர்வு செய்யப்பட்டபோது, ஊடகங்களின் முன்பு தங்களின் சொத்துக் கணக்கைச் சமர்ப்பித்தார்கள். ஆனால், இன்று வரை அரசு தரப்பு குழுவினர் தங்களின் சொத்து மதிப்பைச் சமர்ப்பிக்கவில்லை. இதில் இருந்தே அரசு எத்தனை 'நாணயமானது’ என்று தெரிந்துகொள்ளலாம்!

அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குள் நுழைந்து சீக்கியர்களைக் கண்டமேனிக்குச் சுட்டதுபோல, ராம்தேவ் போன்றவர்களின் பட்டினிப் போராட்டங்களை தடியடி மூலம் அடக்கிவிடலாம் என்று நினைக்கிறது காங்கிரஸ். அது எதிர்மறையாகத்தான் முடியப் போகிறது!

- ந.வினோத்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism