Published:Updated:

வெடித்தது டேங்க் மட்டும்தானா?

சந்தேகங்களை கிளப்பும் கண்ணீர் விபத்து..

வெடித்தது டேங்க் மட்டும்தானா?

சந்தேகங்களை கிளப்பும் கண்ணீர் விபத்து..

Published:Updated:

சென்னை கோயம்பேட்டில் உறவினர்களுக்கும் நண்பர் களுக்கும் கையசைத்து விடை கொடுக்கும்போது, தாங்கள் மீண்டும் திரும்ப மாட்டோம் என்று நினைத்தே இருக்க மாட்டார்கள் அந்தப் பயணிகள். பஸ் கிளம்பிய சுமார் 2.30 மணி நேரத்தில் ஆழ்ந்த உறக்கத் திலேயே... அவர்கள் மொத்தப் பேரையும் தின்று தீர்த்துவிட்டது தீயின் நாக்குகள்!

வெடித்தது டேங்க் மட்டும்தானா?

38 ஆண்டு கால கே.பி.என். டிராவல்ஸ் வரலாற்றில், இப்படி ஒரு கோர விபத்து நடந்தது இதுவே

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெடித்தது டேங்க் மட்டும்தானா?

முதல்முறை. கடந்த 7-ம் தேதி இரவு 10.45 மணிக்கு சென்னையில் இருந்து திருப்பூர் கிளம்பிய பஸ் வேலூர் மாவட்டம், அவலூர் பகுதியில் முன்னால் சென்ற லாரியை முந்திச் செல்லும் முயற்சியில் நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது. உடனே பஸ் முழுவதும் பற்றி எரியவே, டிரைவர் நாகராஜன் மற்றும் சென்னையை சேர்ந்த கார்த்திக் ராஜா ஆகிய இருவர் மட்டுமே உயிர் தப்ப முடிந்தது. மீதம் இருந்த 21 பேரும் உருத்தெரியாமல் கருகி இறந்தார்கள்.

பஸ் எரிந்தபோது அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வெடிச் சத்தம் என்றே நினைத்து ஓடிவந்துள்ளார்கள். சுமார் 30 அடிக்கும் மேல் கொழுந்துவிட்டு தீ எரிந்ததால், பஸ்ஸை யாராலும் நெருங்க முடியவில்லை. தொடர்ந்து காஞ்சிபுரம் காவல் துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் அப்பகுதியினர் தகவல் தெரிவித்தனர். அரை மணி நேரத்தில் மீட்புப் படையினர் வந்துவிட்ட போதிலும், அதற்குள் பயணி களுடன் மொத்தமாக எரிந்து முடிந்திருந்தது பஸ். டிரைவர் நாகராஜன் பயந்துபோய், அருகில் இருந்த போலீஸ் நிலையம் நோக்கி ஓட்டம் எடுக்க, கடைசி படுக்கையில் படுத்திருந்ததால்  பின்பக்கக் கண்ணாடியை உடைத்து தப்பிய கார்த்திக்ராஜா மட்டும் ரோட்டோரத்தில் மனைவியை இழந்து பிரமை பிடித்த நிலையில் இருந்தார்.

விபத்தில் இறந்தவர்களில் திருப்பூர், உடுமலைப்பேட்டை மற்றும் சென்னையைச் சேர்ந்தவர்களே அதிகம். தகவல் அறிந்து, இறந்து போனவர்களின் உறவினர்கள், மருத்துவமனையைச் சுற்றி முற்றுகையிட்டு கதறித் துடிக்க அப்பகுதியே சோகத்தில் ஆழ்ந்தது. கரிக்கட்டைகளாகக் கிடந்த உடல்களில், இறந்தவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் இருந்தது. உடலில் இருந்த நகைகளை வைத்துத்தான் பெரும்பாலான உடல்கள் அடையாளம் காணப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

வெடித்தது டேங்க் மட்டும்தானா?

இந்த விபத்து குறித்து நம்மிடம் அனுபவம் மிக்க பஸ் டிரைவர்கள் பேசினார்கள். ''அரசு பஸ்களில் விபத்து போன்ற சமயங்களில் விபரீதம் பெரிய அளவில் இருக்கக்கூடாது என்பதற்காக அதிகபட்சம் 150 லிட்டர் மட்டுமே டீசல் நிரப்புவார்கள். மேலும், பஸ் பாடியுடன் உராய்வு இருக்கக் கூடாது என்பதற்காக பஸ் பாடியில் இருந்து இரண்டு அடி இடைவெளி இருக்கும்படியாகதான் டீசல் டேங்க் அமைக்கப்பட்டு இருக்கும். இதுதான் நடைமுறை. பராமரிப்பு இல்லாத அரசு பஸ்களில் இருந்து டீசல் டேங்க் தனியாக கழன்று விழுந்த சம்பவம் எல்லாம் நடந்துள்ளது. அப்போதுகூட டேங்க் வெடித்தது இல்லை.

ஆனால், விபத்துக்குள் ளான வால்வோ பஸ்ஸில் பின்பக்கம் இன் ஜினை ஒட்டியே டீசல் டேங்க் இருந்திருக்கிறது. இதுதான் காரணமாக இருந் திருக்கும்.

பெட்ரோல் மற்றும் எல்.பி.ஜி. மட்டுமே மோதும் போது வெடிக்கும் தன்மை கொண்டது.

வெடித்தது டேங்க் மட்டும்தானா?

பெட்ரோலைவிட டீசலின் எரியும் தன்மை பலமடங்கு குறைவு. அப்படியே எரிந்தாலும், மெதுவாக எரியுமே தவிர, நொடியில் பஸ் முழுவதும் பரவும் தன்மை கிடையாது. டீசல் டேங்க் மீது நேரடியாக அதிவேகத்தில் ஒரு பொருள் மோதி, அப்போது டீசல் வெளியே கசிந்தால் மட்டுமே வெடிக்கவோ அல்லது தீப்பிடித்து எரியவோ வாய்ப்பு இருக்கிறது.

இதற்கு உதாரணம், 2001-ம் ஆண்டு சங்ககிரி அருகே வைகுந்தம் என்ற இடத்தில் நடந்த விபத்து. ஈரோட்டில் இருந்து சேலம் வந்த அரசு பஸ் ஒன்று, எதிரே வந்த லாரி திடீர் என்று ரோட்டில் குறுக்காக திரும்பி நின்றதால், நேராக டீசல் டேங்க் மீது அதிவேகத்தில் மோதியது. டீசல் டேங்க் உடைந்து நொடியில் தீ பஸ்ஸில் பரவியது. அந்த விபத்தில் 31 பயணிகள் உடல் கருகி இறந்தார்கள்.

இந்த விபத்தில் டீசல் டேங்க் வெடிக்கவில்லை; வெடித்தால் உருக்குலைந்து போயிருக்கும். ஆனால், அது நசுங்கி மட்டுமே போயிருக்கிறது.

விபத்தின்போது பஸ்ஸின் அடிப்பாகம் சாலை ஓரம் இருக்கும் தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதி இருக்கிறது. பொதுவாக ஆம்னி பஸ்களின் அடிப்பாகத்தில்தான் பெரும்பாலான பார்சல்களை ஏற்றுவார்கள். இந்த பார்சல்களில் ஏதாவது வெடிக்கும் தன்மை கொண்ட பொருட்கள் இருந்ததா என்று தெரியவில்லை. அப்படி ஏதேனும் வெடிக்கும் தன்மையுடைய பொருள் அடிப் பாகத்தில் இருந்தால் மட்டுமே இப்படி பஸ் தீப்பிடித்து இருக்க முடியும். இதில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டும். ஆம்னி பஸ்களில் ஏற்றப்படும் பொருட்களுக்கு இனியாவது கடுமையான கட்டுப்பாடுகள் தேவை!'' என்கிறார்கள்.

விபத்துக்கு உள்ளானவர்களுக்கு உடனடி நிவாரணம் கொடுத்த அரசு, இதையும் கணக்கில் எடுத்துக் கொள் ளட்டும்!

- டி.எல்.சஞ்சீவிகுமார், கே.ஏ.சசிகுமார்,

எஸ். கிருபாகரன்

படங்கள்: என்.விவேக், ச.வெங்கடேசன்  

தமிழகத்தில் அனுமதி இல்லை...

விபத்து குறித்து கே.பி.என். டிராவல்ஸ் நிர்வாக இயக்குநர் கே.பி.நடராஜனிடம் பேசினோம். ''முழுவதும்

வெடித்தது டேங்க் மட்டும்தானா?

மூடப்பட்ட கண்ணாடி களாக இருந்ததால்தான் பயணிகள் தப்பிக்க முடியாமல் போச்சுன்னு சிலர் சொல்றாங்க. அது உண்மை கிடையாது. ஏன்னா இப்போ வரும் லேட்டஸ்ட் பஸ்கள் எல்லாவற்றிலுமே டப்பன் கிளாஸ் என்று சொல்லப்படும் கண்ணாடிதான் பயன்படுத்தப் படுகிறது. கைகளால் ஓங்கி அடித்தாலே உடையும் தன்மை கொண்டவைதான் அவை.

தவிர, எங்களோட பஸ்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தி இருக்கிறோம். அதிகபட்சம் 100 கி.மீ வேகத்துக்கு மேல் பஸ் போக வாய்ப்பே கிடையாது. நான் விசாரித்த வரைக்கும் இந்த விபத்துக்கு காரணம், எங்க வண்டியோட டிரைவர் இடது பக்கத்தில் ஓவர் டேக் செய்ய முயலும்போது, முன்னாடி போன லாரி டிரைவர் ப்ரேக் போட்டு உள்ளார். அதை எதிர்பார்க்காத எங்க டிரைவர் வண்டியை ஸ்லோ பண்ணும்போது பின்னாடி வந்த லாரி. எங்கள் பஸ் மீது மோதியிருக்கிறது. அதனால் பஸ் பள்ளத்தில் உருண்டு, தீப்பிடித்து உள்ளது. இப்போது ஹைவேயில் பயணிப்பவர்களில் நிறையப் பேர், இந்தத் தப்பை செய்கிறார்கள். இதுதான் விபத்துகள் நடக்க முக்கியக் காரணம்...'' என்றார் வருத்தத்துடன்!

விபத்துக்குள்ளான பேருந்து புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்டது. தமிழகத்தில் இதுவரை படுக்கை வசதி கொண்ட பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மட்டுமே பர்மிட் வழங்கப்பட்டுள்ளது.

- கே.ராஜாதிருவேங்கடம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism