புத்தூர் தீவிரவாதிகள் வேட்டைக் களத்தில் செயல்பட்ட 20 போலீஸாருக்கு பதவி உயர்வு, ஐந்து லட்ச ரூபாய் வெகுமதி என அதிரடியாக அறிவித்திருக்கிறார் முதல்வர். அதோடு, போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இன்ஸ்பெக்டர் லட்சுமணனை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லிவிட்டு அவருடைய தீரத்துக்கு வெகுமதியாக 15 லட்ச ரூபாயை முதல்வர் வழங்கினார். இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் தமிழக போலீஸ் வட்டாரத்தில் கிளம்பிய புகைச்சல் காவல் துறைத் தலைமையை மூச்சுத் திணற வைத்திருக்கிறது.

''இந்த வேட்டையில் பங்கேற்ற பலருக்கும் பதவி உயர்வோ, வெகுமதியோ தராமல் ஏமாற்றிவிட்டார்கள்'' என்பதே அந்தப் புகைச்சலுக்குக் காரணம்.

இதே பேனரில் மேலும் 43 பேருக்குப் பதவி உயர்வு மற்றும் வெகுமதி தர இரண்டாவது பட் டியல் தயாராகி வருவதாகவும் ஒரு தகவல் பரவ... டென்ஷன் கூடியது. ''வேண்டுமென்றே முதல் பட்டியலில் சிலரைக் கழட்டிவிட்டு விட்டார்கள். அதிகாரிகள் சிலர் அவர்களுக்கு நல்லது செய்கிற சாக்கில் தங்களுக்கு வேண்டப் பட்டவர்களின் பெயர்களை நுழைக்க பாலிடிக்ஸ் செய்கிறார்கள்'' என்று வெளிப்படையாக விமர்சனங்கள் கிளம்பின. ''வீரப்பன் ஆபரேஷனிலும்கூட, சுமார் 163 பேரை அடுத்தடுத்த பட்டியல்களில் இடைச்செருகல் செய்தனர். அதுதான் இன்றுவரை கோர்ட்டில் சர்ச்சையாக இருக்கிறது. அதுவே முடியாத நிலையில், இப்போது புத்தூர் ஆப்ரேஷன் என்ற பெயரில் மீண்டும் இடைச்செருகல். முதல்வர் இதை அனுமதிக்கக் கூடாது'' என்று இன்னொரு வட் டாரம் சொல்ல ஆரம்பித்துள்ளது.

இந்த சர்ச்சை பற்றி, பெயர் சொல்ல விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர், ''2004-ல் முதல்வராக ஜெயலலிதா இருந்தபோதுதான் வீரப்பன் என்கவுன்ட்டர் நடந்தது. அதற்காக, சுமார் 750 பேருக்கு முதலில் பதவி உயர்வு, வீடுகள் வழங்கி அமர்களப்படுத்தினார். பிறகு, மேலும் 163 பெயர் களைச் சேர்த்தனர். இந்த இடைச்செருகல் விவகாரம் இப்போது கோர்ட்டில் பலத்த சர்ச்சையாக இருக்கிறது. வீரப்பன் விவகாரம் முடிந்தது போல தீவிரவாதிகளை தமிழகத்தில் முற்றிலும் ஒழித்து விட்டது என்று இந்த அரசாங்கம் நம்புகிறதா? தமிழகத்தில் சரிந்துகிடக்கும் போலீஸ் இமேஜை உயர்த்துவதற்காக நாடகம் நடத்தப்படுகிறது. புத்தூர் சம்பவத்தை வைத்து 20 பேருக்குப் பதவி உயர்வு கொடுத்துள்ளனர். அவர்கள் தங்களுடைய கடமையைத்தானே செய்தனர்? லட்சுமணனை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் மற்றவர்கள் என்ன தியாகம் செய்தார்கள்? பதவி உயர்வு தவிர வேறு எந்த வெகுமதியை தந்தாலும் நாங்கள் கேட்கப் போவதில்லை. முதல்வர் ஜெயலலிதா பின் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் இப்படி திடீர் பதவி உயர்வுகளை வாரி வழங்குவது எங்களை எரிச்சல் அடையவைத்துள்ளது. பலரும் கோர்ட்டுக்குப் போய் தங்களுக்கும் இந்த பேனரில் பதவி உயர்வு வேண்டுமென்று கேட்பார்கள். வேறு வழியில்லாமல், இந்த அரசும் வழங்கும். பை-பாஸில் இப்படி பலரும் போய்க்கொண்டிருந்தால் நாங்கள் பின்தங்கிப் போகவேண்டுமா? இந்தமுறை நாங்கள் சும்மா விடப்போவதில்லை'' என்றார் கோபமாக.

இப்போது பதவி உயர்வும் வெகுமதியும் பெற்றவர்கள் முழுமையாக அதற்குத் தகுதி வாய்ந்தவர்களா என்றும் விவகாரம் போகிறது. பங்கேற்ற சிலரது பெயர் வேண்டுமென்றே விடு பட்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறது.

புத்தூர் வேட்டையில் உண்மையான பங்க ளிப்பை செய்தது யார் என்று விசாரித்தோம்.

சி.பி.சி.ஐ.டி. பிரிவின் எஸ்.பி-யான அன்பு தலைமையில் செயல்பட்ட ஏழு பேர், சென்னை ஸ்பெஷல் டிவிஷன் எஸ்.பி-யான அர.அருள் அரசு தலைமையில் ஒன்பது பேர், திருவள்ளூர் கூடுதல் எஸ்.பி. செந்தில்குமார் தலைமையில் ஆறு பேர்... என்று மொத்தம் 20 பேருக்குப் பதவி உயர்வு கிடைத்துள்ளது. எஸ்.பி. அந்தஸ்தில் உள்ள அன்பு, அருள்அரசு இருவருக்கும் பதவி உயர்வு அளிக்க முடியாது. அதனால், இருவருக்கும் வெகுமதி மட்டும் வழங்கப்பட்டுள்ளது. சிலருக்கு வழக்கமாக வரவேண்டிய பதவி உயர்வு வருகிற காலகட்டமாம். உதாரணத்துக்கு, மதுரை டி.எஸ்.பி-யான கார்த்திகேயனுக்கும் திருவள்ளூர் கூடுதல் எஸ்.பி. செந்தில்குமாருக்கும் விரைவில் பதவி உயர்வு வரப் போகிறதாம்.

''புத்தூர் ஆபரேஷனில் வெட்டுப்பட்டவர் இன்ஸ்பெக்டர் லட்சுமணன். அவரைக் காப்பாற்றத் துப்பாக்கியால் பன்னா இஸ்மாயிலை சுட்டவர் டி.எஸ்.பி. கார்த்திகேயன். இந்த இருவரைத் தவிர மற்றவர்கள் ஸ்பாட்டில் இருந்தார்கள். கத்திதான் தீவிரவாதிகளின் ஆயுதமாக இருந்தது. வேறு எந்த வெடி மருந்தும் அந்த வீட்டுக்குள் இல்லை. போலீஸ் பக்ருதீன் வீட்டில் இருந்துதான் வெடிமருந்து எடுத்தனர்'' என்று சொல்லப்படுகிறது.

முதல்வரின் அறிவிப்பு வெளியானதுமே, எங்கள் பெயர் விடுபட்டிருக்கிறது என்று சில அதிகாரிகள் தங்கள் வருத்தத்தை அவரவர் உயர் அதிகாரிகளிடம் பதிவுசெய்ய ஆரம்பித்தனர். ''வேலூர் சி.பி.சி.ஐ.டி. பிரிவில் டி.எஸ்.பி-யாக இருப்பவர் நசீர் பாஷா. வெள்ளையப்பன் கொலைச் சம்பவத்தை நேரில் பார்த்த விட்னஸ், சம்பவம் நடந்த இடத்தில் போலீஸ் பக்ரூதீன் கோஷ்டியினரை அடையாளம் காட்ட... அதி லிருந்துதான் அவர்களை நோக்கி போலீஸ் முன்னேறியது. இந்த முன்னேற்றத்தில் நசீர் பாஷாவின் பங்கு உண்டு. புத்தூரில் லட்சுமணன் தாக்கப்பட்ட பிறகு வரவழைக்கப்பட்டார் நசீர் பாஷா. வீட்டுக்குள் இருந்தவர்களுடன் பேச்சு கொடுத்துக்கொண்டே இருந்தவர் இவர். இவரை வெட்டவும் அரிவாளுடன் ஓடிவந்தார் பிலால் மாலிக். இவரது செல்போனை வாங்கி ஐ.ஜி-யான கண்ணப்பன் பலமுறை உயர் அதிகாரிகளுடன் பேசினாராம். அங்கே எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளில் இவர் இருக்கிறார். பேச்சுவார்த்தைக்குப் பிறகு பன்னா இஸ்மாயில் குண்டு காயத்துடன் வர.. அவரைத் தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்குச் சென்று இரண்டு நாட்கள் கூடவேஇருந்து கண் காணித்தவரும் இந்த நசீர் பாஷா. ஆனால் இவர் பெயர் முதல் பட்டியலில் இல்லை'' என்று சொல்கிறார்கள்.

''அடுத்து குறிப்பிட வேண்டியவர் சென்னை பெரியமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரகுமார். போலீஸ் பக்ருதீனை ஸ்பெஷல் டிவிஷன் இன்ஸ்பெக்டர்கள் லட்சுமணன், ரவீந்திரன் ஆகியோர் துரத்திப் பிடித்தபோது, அங்கே வீரகுமார் டீம் வந்து பக்ருதீனைப் பிடித்துச் சென்றது. இதற்காக, சென்னை போலீஸ் கமிஷனர் வீரகுமார் டீமை பாராட்டினாராம். ஆனால், இவர்களின் பெயர்களும் பட்டியலில் இல்லை'' என்பது இன்னொரு குரூப்பின் வருத்தம்.

மதுரை சி.ஐ.டி. டீம் பற்றியும் சொல்கிறார்கள். ''பால்காரர் சுரேஷ் கொலை வழக்கில் ராத்திரி பகலாக அலைந்து தேடுதல் வேட்டை நடத்தி 'பிரேக் த்ரூ’ செய்தவர்கள் 50 பேருக்கு மேல்'' என்று தென்மாவட்ட போலீஸார் பேசிக்கொள்கிறார்கள். மதுரையைச் சேர்ந்தவர்களில் டி.எஸ்.பி. கார்த்திகேயன் மற்றும் மாரிராஜன், முதல்நிலை காவலர்கள் சிவநேசன் மற்றும் ராஜசேகரன் ஆகியோர் புத்தூர் ஆபரேஷனில் இடம்பெற்றனர். அதற்காக அந்த நால்வருக்கும் பதவி உயர்வு கிடைத்துள்ளது. 'பிரேக் த்ரூ’ செய்த முக்கியமானவர்களுக்கு எந்த ஒரு பாராட்டும் கிடைக்கவில்லை. மதுரையைச் சேர்ந்த பால்காரர் சுரேஷ் கொலைச் சம்பவத்தின்போது அப்துல்லா என்பவரை சி.ஐ.டி. டீம் பிடித்தது. தமிழகத்தில் நடந்த பயங்கர சம்பவங்களை நிகழ்த்தியவர்கள் யார் என்று துப்பு கொடுத்தவர் இவர்தான். போலீஸ் பக்ருதீன் இரண்டுமுறை போனில் பேசி பிரெய்ன் வாஷ் செய்ய.. கொலைக்கு ரெடியானவர் அப்துல்லா. அவரது வாக்குமூலத்தால்தான் போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோரின் தொடர்பு முதன்முதலாக போலீஸுக்கு தெரியவந்தது. இதிலிருந்து நூல் பிடித்துப்போக.. வேலூர், சேலம் ஆகிய ஊர்களில் நடந்த கொலைகளிலும் இதே கோஷ்டி சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. புத்தூர் ஆபரேஷனைத் தொடர்ந்து, மதுரை சி.ஐ.டி. டீமில் நிறைய பேருக்கு பதவி உயர்வோ வெகுமதியோ கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், முதல் பட்டியலில் நால்வர் பெயர்கள்தான் இருந்தன. மற்றவர்களின் பெயர்கள் இல்லை'' என்று புலம்பல் அதிகமாகவே கேட்கிறது.

இதுபோலவே, தமிழகத்தில் கடந்த காலத்தில் பயங்கர தீவிரவாதிகளைப் பிடித்த பதிமூன்று போலீஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்கள் பிடித்ததன் தொடர்ச்சிதான் இப்போது புத்தூர் ஆபரேஷன். பழையவர்களைச் சுத்தமாக புறக் கணிப்பது நியாயமில்லை என்கிறது மற்றொரு தரப்பு.

இப்படியாக விவாதங்கள் ஆங்காங்கே நடந்துகொண்டிருக்கின்றன. இதுபற்றி சென்னை டி.ஜி.பி. அலுவலக உயர் அதிகாரியிடம் கேட்டபோது, ''முதல்வர், ஈகைக் குணத்தோடு பதவி உயர்வு அளிக்க யோசனை சொன்னார். அதைத்தான் அதிகாரிகள் செய்தனர். குறுகிய அவகாசத்தில் தயார் செய்த பட்டியலில், நிஜமாகவே தீவிரவாதிகளைப் பிடிக்க உதவிய சிலரின் பெயர்கள் விடுபட்டிருந்தால் நிச்சயமாக சேர்த்துக்கொள்ளப்படும். மற்றபடி, சம்பந்தமே இல்லாதவர்கள் மீடியா லாபி செய்து வருகிறார்கள். சென்னையைச் சேர்ந்த ஒரு அதிகாரி, சம்பவம் நடந்தபோது அவரின் செல்போன் டவர் காட்டும் இடம் வேறு. அவருக்கு எல்லாம் எப்படித் தர முடியும்? குறிப்பிட்ட சம்பவம் நடந்த பிறகு அங்கு வந்தவர் அவர். இப்போது அவரும் பதவி உயர்வு கேட்கிறார். இவர் மாதிரி யார் பதவி உயர்வு கேட்டாலும் அவர்களின் ஈடுபாடு பற்றி உளவுத் துறையினர் தீர விசாரித்து விட்டுப் பிறகுதான் பெயரை முதல்வருக்கு சிபாரிசு செய்ய முடிவுசெய்துள்ளோம். தவறுகள் நடக்க வாய்ப்பில்லை'' என்கிறார்.

தீவிரவாதிகள் சர்ச்சையைவிட போலீஸ் சர்ச்சை இன்னும் பெரிதாக இருக்கிறதே?

- நமது நிருபர்கள்