சென்னை மற்றும் புத்தூர் ஆபரேஷனில் கைதுசெய்யப்பட்ட போலீஸ் பக் ருதீன், பிலால் மாலிக் இருவரும் வேலூரில் சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் உள்ளனர். இருவரும் போலீஸாருடன் ரொம்ப தோஸ்த் ஆகிவிட்டார்களாம். எந்த ஒரு ஸ்பெஷல் கவனிப்பும் இல்லாமலேயே கடகடவென குற்றச் சம்பவங்களை சொல்லி முடித்தார்களாம். எல்லாவற்றையும் குறித்துக் கொண்ட விசாரணை டீம், சிறிய குழப்பத்தில் இருக்கிறது.

'வேலூர் டாக்டர் அரவிந்த் ரெட்டியை தீர்த்துக்கட்டியது நாங்கள்தான்’ என்று போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோர் போலீசாரிடம் கூறினார்களாம். இதில் சிக்கல் என்னவென்றால், இந்தக் கொலை வழக்கில் உள்ளூர் ரௌடி கோஷ்டியை போலீஸார் கைது செய்துவிட்டனர். இந்த நிலையில், வேலூர் வெள்ளையப்பன் கொலை, சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை... இரண்டையும் விசாரித்துவரும் விசாரணை அதிகாரி என்ன செய்யப்போகிறார்? டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை பற்றி பக்ரூதீன், மாலிக் இருவரும் சொன்னதை முறைப்படி பதிவு செய்கிறாரா? ஸ்கிப் செய்துவிட்டுப் போகிறாரா என்று இருவரும் மௌனமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

விசாரணை அதிகாரிகள், போலீஸ் கஸ்டடியில் உள்ளவர்களை சந்திக்கப்போகும் நண்பர்கள், வழக்கறிஞர்கள்... என்று பல்வேறு தரப்பினரிடம் கிடைத்த தகவல்களை இங்கே தருகிறோம்.

யார் அந்த ஹனீபா, பஷீர்?

சேலம், வேலூர் கொலை சம்பவங்கள், மதுரையில் அத்வானி வருகைக்கு முன் பாலத்தில் குண்டு வைத்தது உள்ளிட்ட விவகாரங்களில் ஆலோசனை, ஸ்பாட் ஆக்ஷனில் ஈடுபட்டவர்கள்தான் ஹனீபா, பஷீர் ஆகிய இருவரும். முன்பு ஒருமுறை ஒரு வழக்கில் சிக்கி, மதுரை ஜெயிலில் ஹனீபா இருந்தபோது, பிலாலையும் அபுபக்கர் சித்திக்கையும் சிறைக்குப் பார் வையாளராக வரவழைத்து இருவரையும் சந்திக்க வைத்தாராம்.

'ஒரு வேலை இருக்கு' - ரகசிய வார்த்தையை அபுபக்கர் சித்திக் சொல்வாராம். அவர் அப்படி சொன்னால், யாரையோ போட்டுத்தள்ள வேண்டும் என்பது அர்த்தமாம். இப்படித்தான் மதுரையில் பால்காரர் சுரேஷ் கொலை நடந்தது. எந்த மோட்டிவும் இல்லாத நிலையில், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பதே புரியாமல் போலீஸ் தவித்தது. இப்போதுதான் அதற்கு விடை கிடைத்துள்ளது. போலீஸ் பக்ருதீன் இப்போதுதான் வாய்திறந்து சொல்லியிருக்கிறாராம். ''10 நிமிடங்களில் சுரேஷை போட்டுத்தள்ள முடிவெடுத்தோம். முஸ்லிம் பகுதிகளில் பெண்களிடம் வட்டிக்குப் பணம் கொடுத்து வந்தாராம் சுரேஷ். அந்த வகையில், எக்குத்தப்பா வட்டி வசூலிப்பதாக கேள்விப் பட்டோம். அதுமட்டுமல்ல... அவரது நடத்தையும் சரியில்லை. இந்தத் தகவல் உண்மையா, இல் லையா என்றுகூட நாங்கள் விசாரிக்க நேரம் இல்லை. தீர்த்துக்கட்டிவிட்டோம்’' என்றாராம்.

அதேபோல், சேலம் ஆடிட்டர் கொலையை முடித்துவிட்டு பக்ரூதீன் பைக் ஓட்ட... அவர் பின்னால் பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் இருவரும் உட்கார்ந்துகொள்ள... டிரிபிள்ஸ் சவாரியாக சேலம் டு நெல்லை வரை போனார்களாம். முதுகில் லக்கேஜ் பேக்கை மாட்டியிருந்த இந்த டிரிபிள்ஸை எந்த ஒரு இடத்திலும் போலீஸ் மடக்கவே இல்லையாம். இதை ஆச்சர்யத்தோடு பக்ருதீன் சொன்னபோது, முகத்தில் ஈயாடவில்லையாம் போலீஸாருக்கு!

இமாம் அலியை மறக்க முடியவில்லை!

பத்து வருடங்களுக்கு முன்பு, தமிழகத்தில் நடந்த பல்வேறு வெடிகுண்டு வழக்குகளில் தேடப்பட்டு வந்த இமாம் அலி, பெங்களூருவில் பதுங்கியிருந்தார். எந்த ஒரு ஆயுதமும் இல்லாமல் நிராயுதபாணியாக இருந்தார். அவரைப் பற்றி துப்பு கிடைத்ததும், தமிழக போலீஸ் டீம் அதிரடியாக துப்பாக்கிச் சூடு நடத்தி இமாம் அலியைக் கொன்றனர். அப்போது வீட்டில் இருந்த ஒரு பெண்ணும் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து இமாம் அலி சிஷ்யர்கள் புதிய ரகசிய இயக்கத்தைத் தொடங்கினர். அதில் முக்கிய உறுப்பினர்கள்... போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பில்லா மாலிக் மற்றும் அபுபக்கர் சித்திக். இவர்களைப்போல வேறு சிலரும் இருக்கிறார்களாம். 'இமாம் அலியை உயிருடன் பிடித்திருந்தால் எவ்வளவோ தகவல்கள் கிடைத்திருக்கும். அவசர கோலத்தில் அன்று போலீஸார் செய்த தவறு, இன்றுவரை எதிரொலிக்கிறது. அதன் பலனை அனுபவித்து வரு கிறோம்' என்று, போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் வேதனையுடன் சொல்கிறார்.

மாமூலில் கமிஷன்!

போலீஸ் பக்ருதீனுக்கு மாமூல் கொடுக்க வேண்டும் என்று சொல்லி பிசினஸ் புள்ளிகளிடம் வசூல் வேட்டை நடத்தியிருக்கிறார்கள் ஒரு கோஷ்டியினர். இவர்கள் ஏரியாவுக்கு பக்ருதீன் வரும்போது, கொஞ்சம் பணத்தை கொடுத்துவிட்டு மீதியை சுருட்டிக்கொண்டார்களாம். எங்கெங்கே எவ்வளவு வசூலித்தனர் என்பதை ஆதாரங்களுடன் பக்ருதீனிடம் விசாரணை அதிகாரிகள் சொல்ல... தன்னிடம் அந்த பிசினஸ் புள்ளிகள் எவ்வளவு கொடுத்ததாக தங்கள் கோஷ்டியினர் சொன்னார்கள் என்பதை நினைவுபடுத்தி சொன்னாராம் பக்ருதீன். வசூல் எவ்வளவு? கையில் வந்தது எவ்வளவு? என்பதை பேப்பரில் கணக்குப்போட்டுப் பார்த்து திகைத்தாராம். 'இத்தனை லட்சம் என்னை ஏமாற்றி விட்டார்களே?' என்று ஆதங்கப்பட்டாராம்.

'இனி, பைப் வெடிகுண்டுதான் ஒரே தீர்வு!’

''பெங்களூருவில் பைக் வெடிகுண்டு வெடித்த சம்பவத்துக்கு முன், என்னைச் சந்தித்த சித்திக், 'ஒரு பைக் வேண்டும்' என்றார். நானும் ஏற்பாடு செய்து கொடுத்தேன். அடுத்த ஏழு மணி நேரத்தில் குண்டு வெடித்தது'’ என்றாராம் பக்ருதீன். ''வேலூர், சேலம் ஜெயில்களில்தான் நான் அதிகம் இருந்திருக்கிறேன். அந்த வகையில், அந்த ஊர்களில் நண்பர்கள் அதிகம். அதனால்தான், சேலம் ஆடிட்டர், வேலூர் வெள்ளையப்பன் மற்றும் டாக்டர் அரவிந்த் ரெட்டி ஆகியோரை கொல்ல முடிவு செய்தேன். நான் முதலில் யாரைக் கொல்ல முடிவெடுக்கிறேனோ அவர்களை நானே போய் சந்திப்பேன். வேலூர் வெள்ளையப்பனைக் கொல்வதற்கு முதல்நாள் அவரை நான் சந்தித்தேன். கோவையில் இருந்து வரும் அனு தாபி என்று அறிமுகப்படுத்திக்கொண்டு பேசிக்கொண்டிருந்தேன். அதற்கு மறுநாள்... அவரை வெட்டிக்கொல்ல நாள் குறித்தேன். அவரும் மகேஷ் என்பவரும் வருவார்கள் என்று காத்திருந்தேன். ஆனால், மகேஷ் வரவில்லை. வெள்ளையப்பன் மட்டுமே வந்தார். அவரைத் தீர்த்துக்கட்டினேன். இப்போது நான் சென்னைக்கு வந்தது... இங்கே இருக்கும் இந்து இயக்க முக்கியப் புள்ளிகள் இருவரை போட்டுத்தள்ள திட்டமிடத்தான். வந்த இடத்தில் மாட்டிக்கொண்டேன்.

சமீபகாலமாக, எங்கள் கொலைப் பட்டியலில் இருப்பவர்களை போலீஸார் பாதுகாக்கிறார்கள். ஈரோட்டில் ஒரு பிரமுகரை நெருங்கியும், கொல்ல முடியவில்லை. அதனால், இனி அரிவாளுக்கு வேலையில்லை. பைப் வெடிகுண்டுதான் ஒரே வழி என்ற முடிவுக்கு வந்தேன். கடந்த சில நாட்களில் 17 கிலோ பைப் வெடிகுண்டுகளை தனி ஆளாக தயாரித்து முடித்தேன். அதை புத்தூரில் பன்னா இஸ்மாயில் தங்கியிருந்த வீட்டுக்கு அடுத்த தெருவில், நான் தங்கியிருந்த மாடி போர்ஷனில் வைத்திருக்கிறேன்'’ என்றாராம். அதன்படி, புத்தூருக்கு பக்ருதீனை அழைத்துப்போய் அவர் வைத்திருந்த வெடிமருந்துகளை கைப்பற்றியது தமிழகப் போலீஸ்.

பக்ருதீனின் குடும்ப சென்டிமென்ட்!

போலீஸ் விசாரணையில், ''எனக்கு மதுரையில் மனைவி இருக்கிறார். எனக்கு வேண்டாதவர்கள் சொன்னதைக் கேட்டு என்னை விட்டுப் பிரிந்து விட்டாள். மறுபடியும் அந்தப் பெண்ணையே சம்பிரதாயப்படி திருமணம் செய்துகொள்வேன். இடையே, வீடு கிடைக்காதபோது என் சகாக்கள் என்னைத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தினர். நான் மறுத்துவிட்டேன். 'என் மனைவி மதுரையில் இருக்கிறாள். அவளை மறக்க முடியாது' என்றேன். அவளைச் சந்திக்க வைத்தால் நன்றி உள்ளவனாக இருப்பேன்'' என்றாராம் பக்ருதீன்.

ஆக்டோபஸ் ஏன் பின்வாங்கியது?

ஒரு கட்டத்தில், வீட்டுக்குள் இருந்து சமையல் கேஸை திறந்துவிட்டு, கூச்சல் போட்டிருக்கிறார் பிலால் மாலிக். அதன் வாசனையை உணர்ந்ததும், வீட்டுக்கு அருகில் இருந்த தமிழக போலீஸாரை சற்று விலகி நிற்க சொன்னார்களாம் அதிகாரிகள். ஆந்திர மாநில தீயணைப்பு வேனை வரவழைத்து, தண்ணீரைப் பீய்ச்சியடித்து கேஸை வெளியேற் றினார்களாம். வேறு ஏதாவது விபரீதத்தில் ஈடுபடுவார்களோ என்ற பீதியில், வீட்டுக்குப் போகும் மின்இணைப்பைத் துண்டித்தார்களாம். அதிகாலையில், பன்னா இஸ்மாயிலை போலீஸார் சுட்டதும், அங்கிருந்த டியூப் லைட்டை பிலால் மாலிக் கத்தியால் ஓங்கி வெட்டி உடைத்துவிட்டு, இருட்டுச் சூழ்நிலை ஏற்படுத்தினாராம். அப்போது தெறித்த ஒரு துண்டு, அருகில் நின்ற திருவள்ளூர் கூடுதல் எஸ்.பி-யான செந்தில்குமாரின் கை விரலில் பட்டு ரத்தம் கொட்டியதாம். இதுமாதிரி வேறு ஏதாவது பயங்கரத்தில் ஈடுபடலாம் என்று எதிர்பார்த்து, ஆந்திர டி.ஜி.பி-யிடம் பேசி, உதவிக்கு ஆக்டோபஸ் படையை வரவழைத்தார்களாம். மாவோயிஸ்ட்களைப் பிடிப்பதில் கில்லாடிகளான அந்த அதிரடிப் படையினர், 'தமிழக தீவிரவாதிகள் விஷயத்தில் சென்டிமென்ட்தான் எடுபடும். நாங்கள் ஒதுங்கிக்கொள்கிறோம்' என்று சொல்லிவிட்டு, அங்கு நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளை திகிலோடு பார்த்துக்கொண்டு நின்றார்களாம்.

போலீஸ் பக்ருதீனின் பிரார்த்தனை!

புத்தூர் ஆபரேஷன் விவகாரத்தை, தான் ஜெயிலுக்குள் போவதற்கு முன்புவரை உடன் இருந்த போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டு வந்தாராம். அங்கு நடப்பதை லைவ்-ரிலே ஆக சொன்னார்களாம். 'பெண்கள், குழந்தைகள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடாது. போலீஸ் ஆபரேஷன் நல்லபடியாக முடிய வேண்டும்' என்று பலமுறை பிரார்த்தனை செய்தாராம் பக்ருதீன்.

இன்ஸ்பெக்டர் லட்சுமணன் தாக்கப்பட்டதைக் கேள்விப்பட்டு, 'எங்க ஆட்கள் தப்பு பண்ணிட்டாங்களே? அவரை அட்டாக் பண்ணியிருக்கக் கூடாது' என்று கருத்துச் சொன்னாராம். இறுதி யாக, ஜெயிலுக்குள் போகும் முன், 'அந்த இன்ஸ்பெக்டர் சீக்கிரமே குணம் அடைய பிரார்த்திக்கிறேன்' என்று மனமுருகி அருகில் நின்ற போலீஸாரிடம் சொன்னபோது, அவர் களின் கண்கள் பனித்திருந்தன!

- கனிஷ்கா, ஏ.சசிகுமார்

படங்கள்: ச.வெங்கடேசன்

குடியாத்தம் கேம்ப்!

கடந்த வருடம் மார்ச் மாதம் முதல், பிலால் மாலிக் தன் குடும்பத்துடன் குடியாத்தத்தில் ஒரு அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் குடியிருந்துள்ளார். தமிழ்நாடு முழுக்க தீவிரவாதிகள் குறித்த புகைப்படத்தை காவல் துறை வெளியிட்டு இருந்தாலும், தன்னுடைய அடையாளம் தெரி யாத அளவுக்கு மீசையை நன்றாக வளர்த்து பிலால் மாலிக் நடமாடி இருக்கிறார். பன்னா இஸ்மாயில், வாரத்துக்கு ஒருமுறை வந்து சென்றுள்ளார். வெள்ளையப்பன், ஆடிட்டர் ரமேஷ் இருவரையும் கொன்ற பிறகு, குடியாத்தத்தை விட்டு கிளம்பி இருக்கிறார்கள்!

வேலூருக்கு வந்த வெளிமாநில போலீஸார்!

பெங்களூருவில் இருந்து வந்த தேசிய புலனாய்வுப் படையினர், பக்ருதீன் மற்றும் பிலால் மாலிக் ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், பெங்களூரு குண்டு வெடிப்புச் சம்பவத்தில் அவர்கள் ஈடு பட்டதை ஒப்புக்கொண்டார்களாம். குஜராத் மாநிலத்தில் இருந்தும் சிறப்புப் புலனாய்வுக் குழு வந்து விசாரித்து விட்டுச் சென்றுள்ளது. நரேந்திர மோடியின் நேரடி உத்தரவின் பேரில், அந்தக் குழுவினர் தமிழக அரசிடம் அனுமதி கேட்டுவிட்டுத்தான் வந்துள்ளனர். மதுரையில் அத்வானியைக் கொல்ல பைப் வெடிகுண்டுகளை வைத்த வழக்கில், துருவித் துருவி விசாரித்துள்ளனர். ஹைதராபாத்தில் இருந்து தேசியப் புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த ஒரு இன்ஸ்பெக்டரும் வேலூர் வந்து இருவரையும் விசாரித்து விட்டுச் சென்றுள்ளார்.

என்கவுன்ட்டர் ஆபத்து!

போலீஸாரின் விசாரணை ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க... பக்ரூதீன், பிலால் மாலிக் இருவரும் வக்கீல்கள் மூலமாக வேலூர் நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். அதில், ''எங்களை விசாரிக்கும்போது என்கவுன்ட்டரோ அல்லது, அடித்தோ காயப்படுத்த வாய்ப்பு இருக்கிறது. அதனால், வழக்கறிஞர்களைச் சந்திக்க எங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்!'' எனக் கேட்டுள்ளனர். அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 'வேண்டுமானால், 11-ம் தேதி ஆஜராகும்போது வழக்கறிஞர் ஒருவரை சில நிமிடம் சந்திக்க அனுமதி வழங்கப்படும்’ என்று நீதிபதிகள் கூறி இருக்கின்றனர்.