இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறாரா முதல்வர்?

சென்னையில் அப்போலோ மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா, இன்று மாலை 5 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, போயஸ் கார்டன் வீட்டுக்கு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. 

கடந்த செப்டம்பர் 22-ம் தேதி அன்று இரவு உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார் முதல்வர்.

நேற்று அப்போலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி, முதல்வர் டிஸ்சார்ஜ் ஆக இன்னும் சில வாரங்கள் ஆகலாம் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!