வெளியிடப்பட்ட நேரம்: 15:24 (28/11/2016)

கடைசி தொடர்பு:15:36 (28/11/2016)

ஈழத்தை வீரத்தின் விளைநிலம் ஆக்கியவர்கள்! (Album)

 

ஈழத்தை வீரத்தின் விளைநிலம் ஆக்கியவர்கள் புகைப்படத் தொகுப்பை காண இங்கே கிளிக் செய்யுங்கள்

'தமிழ் ஈழம்’ என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து விடுதலைப்புலிகள் அமைப்பைத் தொடங்கினார் பிரபாகரன். 1972-ம் ஆண்டு காலகட்டத்தில், “புதிய தமிழ்ப்புலிகள்” என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு, 1976-ம் ஆண்டு மே மாதம் 5-ம் தேதி, ‘தமிழீழ விடுதலைப்புலிகள்’(எல்.டி.டி.இ)  என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. விடுதலைப்புலிகளின் ராணுவக் கட்டுமானத்தில், தரைப்படை, கடற்படை(கடற் புலிகள்), வான்படைகள் இயங்கின. இவைதவிர பல சிறப்புப் படையணிகளும் உருவாக்கப்பட்டு இருந்தன. ஜெயந்தன் படையணி, சிறுத்தைப் படையணி, மகளீர் படையணி, சார்லஸ் ஆண்டனி படையணி, மோட்டார்ப் படையணி, ஆட்லறிப் படையணி, டாங்கிப் படையணி என என்று அவற்றில் பல பிரிவுகள் இருந்தன. கரும்புலிகள் என்ற பிரிவு தற்கொலைத் தாக்குதல் நடத்தும் பிரிவாக செயல்பட்டது. 

                    ஈழத்தை வீரத்தின் விளைநிலம் ஆக்கியவர்கள் புகைப்படத் தொகுப்பை காண இங்கே கிளிக் செய்யுங்கள்

இந்தப் படைகளில் பாணியாற்றி, வீர மரணம் அடைந்தவர்களை நினைவுகூரும் விதமாக, நவம்பர் 27-ம் தேதியை மாவீரர் தினமாக விடுதலைப்புலிகள் அனுசரித்து வந்தனர். விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த லெப்டினன்ட் சங்கர், அமைப்புக்காக உயிர் துறந்த நாள்தான். நவம்பர் 27. விடுதலைப்புலிகள் அமைப்புக்காக முதன்முதலில் உயிர் துறந்த சங்கரின் நினைவு நாளைத்தான், மாவீரர் தினமாக புலிகள் அறிவித்தனர். சங்கரைப்போல், அந்த அமைப்பில் இருந்து உயிர்தியாகம் செய்தவர்கள் பல ஆயிரக்கணக்கில் இருக்கின்றனர். அவர்களில் முக்கியமான சிலரின் புகைப்படத் தொகுப்பைப் பார்க்க இங்கே க்ளீக் செய்யவும்.

                    ஈழத்தை வீரத்தின் விளைநிலம் ஆக்கியவர்கள் புகைப்படத் தொகுப்பை காண இங்கே கிளிக் செய்யுங்கள்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்