வெளியிடப்பட்ட நேரம்: 00:32 (05/12/2016)

கடைசி தொடர்பு:11:08 (05/12/2016)

ஜெயலலிதா நலம்பெற கருணாநிதி, ஸ்டாலின் விருப்பம்

நாட்டில் இருக்கும் பல்வேறு தலைவர்கள் முதல்வர் ஜெயலலிதா பூரண உடல்நலம் பெற வேண்டும் என பிரார்த்திப்பதாக அறிவித்துள்ள நிலையில், திமுக தலைவர் மு.கருணாநிதி மற்றும் தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினும் ஜெயலலிதா நலம் பெற வேண்டும் என ட்வீட் செய்துள்ளனர்.

'தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் விரைவில் பூரண நலம் பெற விழைகிறேன்.' என்று கருணாநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

'முதல்வருக்கு அளிக்கப்படும் தீவிர சிகிச்சைகள் பலனளித்து விரைவில் நலம் பெற விரும்புகிறேன்.' என ஸ்டாலினும் ட்வீட் செய்துள்ளார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க