வெளியிடப்பட்ட நேரம்: 14:09 (06/12/2016)

கடைசி தொடர்பு:14:37 (06/12/2016)

ஜெயலலிதா வாழ்க்கையின் 14 திருப்புமுனை ஆண்டுகள்!

ஜெயலலிதா ..! பெங்களூரில் தொடங்கி கோட்டையை தொட்டு முடிந்த சரித்திரப் பயணத்தின் 'கழுகுப் பார்வைக் காட்சிகள்’ இங்கே...

1948 பிப்ரவரி 24, ஜெயராமுக்கும் வேதா என்ற சந்தியாவுக்கும் பிறந்த மகள்தான் ஜெயலலிதா. இவருக்கு ஒரு அண்ணன் உண்டு. அவர் பெயர் ஜெயகுமார். 

1958 அம்மா சந்தியாவுடன் சென்னை வந்தார்.  

1960 சென்னை சட்டக் கல்லூரியில் வைத்துதான் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் முதன் முதலாகச் சந்தித்தனர். சென்னை சட்டக் கல்லூரியின் ஆண்டு விழாவில் பரத நாட்டியம் ஆட பன்னிரெண்டு வயதில் வந்திருந்தார். அன்றைய சிறப்பு அழைப்பாளர் எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவுக்கு ஒரு வெள்ளிக் கோப்பையை வாங்கி வரச் சொல்லி எம்.ஜி.ஆர் பரிசுக் கொடுத்தார். 

1964 'வெண்ணிற ஆடை' படத்தில் நடிக்கிறார். அவரை இயக்குநர் பந்துலு பார்க்கிறார். 'ஆயிரத்தில் ஒருவன்' படத்துக்கு ஒப்பந்தம் செய்கிறார். ஆயிரத்தில் ஒருவனின் அடிமைப் பெண் ஆகிறார்.

1972 காலகட்டத்தில் 'மனம் திறந்து சொல்கிறேன்' என்ற தலைப்பில் தனது வாழ்க்கை வரலாற்றை எழுத ஆரம்பித்தார் ஜெயலலிதா. 23 வாரங்கள் அவர் சொல்லச் சொல்ல பத்திரிகையாளர் எஸ்.ரஜத் எழுதினார். 24-வது வாரம் அவரே எழுதுவதை நிறுத்திவிட்டார். நிறுத்த அவர் நிர்பந்திக்கப்பட்டார். 

"இந்தத் தொடரை நிறுத்துவதிலே மகிழ்ச்சியே கிடையாது. எல்லோருமே வாழ்க்கையிலே தவறுகள் பண்றோம். என்னுடைய தவறையும் ஒத்துக்கிறேன். முதல் தவறு, என் வாழ்க்கையில் சம்பந்தப்பட்ட அநேகம் பேர் உயிருடன் இருக்கும்போது சுயசரிதம் எழுத ஆரம்பித்தது. இரண்டாவது தவறு, எழுதுவதில் ரொம்ப ஃபிராங்க் ஆக இருந்ததுதான்." என்று வெளிப்படையாகச் சொன்னார்.

1977-ல் எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்து, ஆட்சியை பிடித்தபோதும். 1980-ல் மீண்டும் ஆட்சியைப் பிடித்தபோதும் அரசியல் ஆர்வம் இல்லாமல் இருந்தவர்  - 1982-க்குப் பிறகு மீண்டும் எம்.ஜி.ஆருடன் வெளிப்படையாக அடையாளம் காட்டிக்கொண்டார். 

1982-ல் அ.தி.மு.க-வின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆனார் ஜெயலலிதா. அவருக்கு தலைமைக் கழகத்தில் தனி அறை ஒதுக்கப்பட்டது. 

1984 அக்டோபர் 4-ம் தேதி எம்.ஜி.ஆர். சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அவரைப் பார்க்க அப்போலோ சென்றார் ஜெயலலிதா. அவரைப் பார்க்க விடாமல் ஜெயலலிதாவை தடுத்தார்கள். 

1986-ல் மதுரையில் நடந்த எம்.ஜி.ஆர் மன்ற மாநாட்டில் ஜெயலலிதாவுக்கு பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்தார் எம்.ஜி.ஆர். 6 அடி உயரத்தில் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி செங்கோலை, ஜெயலலிதாவுக்கு கொடுத்தன் மூலம் எனக்கு அடுத்து இவர்தான் என்பதை எம்.ஜி.ஆர் சொல்லாமல் சொன்னார். 

1989-ம் அ.தி.மு.க ஜானகி மற்றும் ஜெ. தலைமையில் இரண்டு பிரிவுகளாக தேர்தலை எதிர்கொண்டது. ஜெ.அணி 27 இடங்களில் வெற்றிப்பெற்றது. பெற்ற வாக்குகள் 21.15%. ஜானகி அணி 9.19%. 

1991 ஜெயலலிதா தலைமையில் போட்டியிட்ட அ.தி.மு.க 168 தொகுதிகளில் போட்டியிட்டு 164 இடங்களில் வென்றது. ஜெயலலிதா முதல்முறை முதல்வர் ஆனார். 

2001-ம் ஆண்டு ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆனார். 

2011-ம் ஆண்டு 150 தொகுதிகளில் வென்று ஜெயலலிதா ஆட்சி அமைத்தார். 

2016 மே மாதம் நடந்த தேர்தலிலும் வென்று முதல்வர் ஆனார் ஜெ.

 

உதவி : 'பெரியோர்களே தாய்மார்களே', 'தமிழக அரசியல் வரலாறு' புத்தகங்கள். 

தொகுப்பு : நா.சிபிச்சக்கரவர்த்தி 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்