மு.க.ஸ்டாலின் தி.மு.க-வின் செயல் தலைவர் ஆகிறார்!


கடந்த சில தினங்களுக்கு முன் தி.மு.க. தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருந்தார். அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் என அனைவரும் அவர் நலம் பெற வாழ்த்து தெரிவித்து வருவதோடு நேரிலும் நலம் விசாரித்து  வருகிறார்கள்.   

முதல்வர் ஜெயலலிதா மறைந்த சூழ்நிலையில், தமிழக அரசியல் களத்தில் பல பரபரப்பு திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த சூழ்நிலையில் தி.மு.கவிலும் சில மாற்றங்கள் அரங்கேறவிருக்கின்றன என்கிறது அறிவாலய வட்டாரம். அதன்படி மு.க.ஸ்டாலின் தி.மு.க.வின் செயல் தலைவராக நியமிக்கப்படலாம்.

எ.வ.வேலு கட்சியின் பொருளாளராகவும், அழகிரி மகன் துரை தயாநிதி சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினராகவும் நியமிக்கப்படுவதற்கான பணிகள் வேகமெடுத்திருக்கின்றன.


அரசியல் அரங்கில் தி.மு.கவின் எதிர்காலம் என ஸ்டாலின் முன்னிலைப்படுத்தப்படும் அதே வேளையில், அழகிரி தரப்புக்கு கட்சியில் முக்கிய பிரதிநிதித்துவமும் ஒருசேர அளிக்கப்படுகிறது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!