சின்னம்மா... இப்படி பண்றீங்களேம்மா..! | A satire article about posters and banners for Sasikala

வெளியிடப்பட்ட நேரம்: 18:29 (15/12/2016)

கடைசி தொடர்பு:18:29 (15/12/2016)

சின்னம்மா... இப்படி பண்றீங்களேம்மா..!

அ.தி.மு.க-வுக்கு சசிகலாதான் அடுத்த தலைமைங்கிறது கிட்டத்தட்ட தெரிஞ்சு போச்சு. கணேஷா இருந்து வேதாளமாக ட்ரான்ஸ்ஃபர்மேசன் ஆகிற அஜீத் மாதிரி அம்மாவின் தொண்டர்களாக இருந்தவங்க சின்னம்மாவின் தொண்டர்களாக மாறி என்னன்ன அலப்பறைகள் பண்ணுவாங்கனு சும்மா ஒரு கற்பனை!

சின்னம்மா

* காலங்காலமாக தமிழ் சினிமாவில் இருந்து வருகின்ற அம்மா சென்டிமென்ட் படங்களை 1000, 500 ரூபாய் நோட்டுகள் மாதிரி கொஞ்சம் ஓரமாகத் தூக்கி வெச்சிட்டு எல்லாமே ஒரே சின்னம்மா சென்டிமென்ட் படங்களாக சொந்தக்காசைப் போட்டாவது படம் எடுத்து வெள்ளிதோறும் சொல்லி ரிலீஸ் செய்வார்கள். 

 

* தமிழ்ல டைட்டில் வெச்சுக்கங்க தாய்லாந்து மொழியில டைட்டில் வெச்சுக்கங்க...  ஆனா சின்னம்மா செண்டிமென்ட் படமாக இருந்தால் கட்டாயம் வரிவிலக்கு உண்டுனு சட்டமாகவே கொண்டுவந்தாலும், படம் பார்க்க அவங்களே ஃப்ரீ டிக்கெட் கொடுத்து ஆடியன்ஸை அனுப்பிவைத்தாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை! 

 

* இதுவரைக்கும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பாட்டுகளை ரிங் டோனாக வெச்சிக்கிட்டு இருந்த ரத்தத்தின் ரத்தங்கள் எல்லாம் சின்னம்மா பாடல்களாகத் தேர்ந்தெடுத்து காதில் ரத்தம் வர வைக்க வாய்ப்புள்ளது. சின்னம்மா பாட்டே கிடைக்கலைனாலும் 'சக்கரக்கட்டி' படத்து 'சின்னம்மா சிலக்கம்மா', 'ஒஸ்தி' படத்து 'கலாசலா கலசலா', 'அம்பிகாபதி' படத்து 'கலா ரசிகா'னு ஏதாவது ஒன்றை காலர் டோன், ரிங் டோன், மெசேஜ் டோன் என வைத்து அட்ஜெஸ்ட் செய்து கடமை ஆற்றுவார்கள் என சோர்ஸ் சொல்கிறது.

சின்னம்மா

* அ- அம்மா, ஆ- ஆடு என இருந்த பள்ளிப்பாடத்தை எல்லாம் புதுமைப்படுத்தி அ-அரசியல், ஆ-ஆட்சி, சி- சின்னம்மா, ம- மன்னார்குடி என எக்குத்தப்பாக எதையாவது அள்ளிப்போட்டு சமச்சீர் கல்வி மாதிரி புதிதாக எழுத்துச்சீர் கல்வி என ஒன்றை உருவாக்கி கண்ணில் தண்ணீர் வரவைக்கவும் ஏகபோக வாய்ப்பு இருக்கிறது.

 

* 8 மணி ஆனாலே பாட்டுப்பாட ஆரம்பிக்கும் வெள்ளியங்கிரி அங்கிள் மாதிரி, ஆட்கள் ஒண்ணு கூடிட்டாலே ஆட்டோமேட்டிக்கா பாட ஆரம்பிச்சிடுற அ.தி.மு.க-காரங்க அம்மா என்றால் அன்பு, அப்பா என்றால் அறிவுனு மட்டுமே பாடிக்கிட்டு இருந்ததெல்லாம் போய் சின்னம்மா என்றால் சிறப்பு என எக்ஸ்ட்ராவாக பல்லவியிலே பல்லைப் போட்டு பாட்டுப் பாடினாலும் கேட்டுதான் ஆகணும் மக்களே, ஏன்னா இது சகிப்புத்தன்மை மிக்க நாடு. ஆங்.

சின்னம்மா

* அடிப்பொடிகள் முதல் அமைச்சர்கள் வரை 'சின்னம்மாவால் நான்; சின்னம்மாவுக்காகவே நான்' என்பதையே ஸ்லோகனாக்கி புகைப்பழக்கம் உடலுக்கு தீங்கானதுனு  தியேட்டரில் அடிக்கடி டிஸ்க்லைமர் போடுவதுபோல் மறக்காமல் எல்லாக் கட்சி மீட்டிங்கிலேயும் இதைச் சொல்லும் காலம் வெகுதொலைவில் எல்லாம் இல்லை மக்களே. இதோ மிகமிக அருகில்.

 

* ட்ரம்பின்  மனைவியே சின்னம்மாவிடம் வந்து பகுதி நேர படிப்பாக அரசியலைக் கற்றுக்கொண்டு போய் அங்கே ட்ரம்புக்கு சொல்லிக் கொடுத்துதான் ட்ரம்ப்பே வெற்றிபெற்றார் என்பது உங்களில் எத்தனைப் பேருக்குத் தெரியும் என யாராவது கொளுத்திப்போட்டு கும்மாளம் அடிக்கும் சம்பவங்களையும் நிகழ்த்த அதிக வாய்ப்பிருக்கிறது.

- ஜெ.வி.பிரவீன்குமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்