வெளியிடப்பட்ட நேரம்: 07:48 (18/12/2016)

கடைசி தொடர்பு:07:48 (18/12/2016)

பணப்பரிவர்த்தனை குறித்து விஜயகாந்த் ஆவேசம்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரூபாய் 500, 1,000 பழைய நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி புதிய நோட்டுகள் வாங்க மக்கள் படும் துயரங்கள் இனியும் தொடரக்கூடாது. எல்லா பண பரிவர்த்தனைகளும் வங்கிகள் மூலம் தான் பரிமாற்றம் செய்யவேண்டும் என்கிற நிலையில், தற்போதுள்ள வங்கிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. அதனால் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கூடுதலாக புதிய வங்கிகளை நிறுவிட வேண்டும். மேலும் வங்கிகளில் கூடுதலாக அலுவலர்கள், பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க