வெளியிடப்பட்ட நேரம்: 01:57 (28/12/2016)

கடைசி தொடர்பு:03:05 (28/12/2016)

மக்கள் நலக்கூட்டணியில் பாதிப்பில்லை...திருமாவளவன் கருத்து!

தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பாக மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் நலக்கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி தேர்தலை சந்தித்தது. அதேபோல மக்கள் நலக்கூட்டணி இணைந்தே உள்ளாட்சி தேர்தலை சந்திக்கும் என முடிவெடுக்கப்பட்டிருந்த நிலையில், தேர்தலுக்கு முன்பாகவே மக்கள் நலக்கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேறுவதாக அக்கட்சியின் தலைவர் வைகோ அறிவித்தார். மேலும், கூட்டணியில் இருந்து வெளியேறினாலும் அதன் தலைவர்களுடன் நட்பு தொடரும் என்று அவர் கூறியிருந்தார். 

இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இதுகுறித்து பேசும்போது, மக்கள் நலக்கூட்டணி கட்சிகளுக்கிடையே சில முரண்பாடுகள் இருந்தது உண்மைதான். ஆனால் மதிமுக இல்லாவிட்டாலும் மக்கள் நலக்கூட்டணி தொடரும் என்றும் எங்கள் கூட்டு இயக்கத்தின் புதிய செயல் திட்டத்தை விரைவில் வெளியிடுவோம் என்றும அவர் கருத்து தெரிவித்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க