Published:Updated:

டெல்லி துணை நிலை ஆளுநராகிறார் அனில் பைஜால்

டெல்லி துணை நிலை ஆளுநராகிறார் அனில் பைஜால்
டெல்லி துணை நிலை ஆளுநராகிறார் அனில் பைஜால்
டெல்லி துணை நிலை ஆளுநராகிறார் அனில் பைஜால்

டெல்லி துணை நிலை ஆளுநராக இருந்த நஜீப் ஜங் தனது பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார். இன்று அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டார் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி. இந்நிலையில், டெல்லியின் துணை நிலை ஆளுநர் பதவிக்கு அஜய் பைஜால் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது. அதை சுஷ்மா ஸ்வராஜும் வழிமொழிந்துள்ளார். எனவே, அவர் கூடிய விரைவில் டெல்லியின் துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்பார் என தெரிகிறது. அஜய் பைஜால் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றியவர். மத்திய அரசின் முக்கிய பொறுப்பான உள்துறை செயலாளராக பதவி வகித்துள்ளார்.