31-ல் பொதுச்செயலாளராக பொறுப்பேற்கிறார் சசிகலா? | Sasikala likely to take ADMK Genral secretary charge on 31st

வெளியிடப்பட்ட நேரம்: 22:22 (29/12/2016)

கடைசி தொடர்பு:10:29 (30/12/2016)

31-ல் பொதுச்செயலாளராக பொறுப்பேற்கிறார் சசிகலா?

அதிமுக செயற்குழு, பொதுக்குழு இன்று நடந்தது. இதில் அக்கட்சி பொதுச்செயலாளராக சசிகலாவை நியமனம் செய்ய ஒப்புதல் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து தீர்மான நகல் சசிகலாவிடம் வழங்கப்பட்டது.  இந்நிலையில் வருகின்ற 31-ம் தேதி சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்பார் என அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. அதன்படி, 31-ம் தேதி மாலை அதிமுக தலைமை அலுவலகத்தில் இதற்கான விழா நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க