வெளியிடப்பட்ட நேரம்: 13:47 (30/12/2016)

கடைசி தொடர்பு:14:24 (30/12/2016)

அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டம் எதற்காக?

அ.தி.மு.க தலைமைக்கழகத்தில் இன்று மாலை 4 மணிக்கு எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடக்க இருக்கிறது. பொதுக்குழுவுக்கு மறுநாளே கூட்டம் நடப்பதால், கட்சி நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் "இன்று கூடும் கூட்டத்தில் தொகுதி பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டத்துக்குத் தலைமை தாங்க இருக்கிறார். மாவட்டம்தோறும் உள்ள மக்கள் பிரச்னைகள் என்னென்ன? தொகுதி மக்களின் கோபத்தைத் தணிக்கும் வகையில் முன்னுரிமை கொடுக்க வேண்டிய திட்டங்கள் என்ன? கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டங்கள் எவை? நிறைவேற்றாமல் அரைகுறையாக நிற்கும் பணிகள் என்னென்ன? என்பது குறித்து விவாதிக்கின்றனர். இவற்றை முழுமையாக நிறைவேற்றுவது குறித்துப் பேச உள்ளனர். மேலும், அதிகாரத்துக்குள் சில மாற்றங்களைச் செய்யவும், கார்டன் தரப்பில் தயாராகி வருகிறார்கள்" என்கிறார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க