ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா

அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்க உள்ள சசிகலா, இன்று மாலை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தம்பிதுரை ஆகியோரும் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். தீர்மான நகலை சமாதியில் வைத்து ஆசி பெற்றார் சசிகலா. பின்னர் போயஸ் கார்டனில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அமைச்சர்களுடன் வந்தார். அங்கே சசிகலாவுடன் அவர்கள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. 

 

இன்று மாலை நான்கு மணிக்கு அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடப்பதாக தகவல் பரவியது. ஆனால், இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லையாம். நாளை காலை ஒன்பது மணிக்கு அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் சசிகலா, அக்கட்சியின் பொதுச்செயலாளராக பதவி ஏற்க உள்ளார். பதவியேற்றபின், முதல்முறையாக கட்சியினரிடையே உரையாற்ற உள்ளார் சசிகலா. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!