Published:Updated:

முல்லைப் பெரியாறு: ஐவர் குழு அறிக்கை விரைவில் தாக்கல்

 முல்லைப் பெரியாறு: ஐவர் குழு அறிக்கை விரைவில் தாக்கல்
முல்லைப் பெரியாறு: ஐவர் குழு அறிக்கை விரைவில் தாக்கல்
 முல்லைப் பெரியாறு: ஐவர் குழு அறிக்கை விரைவில் தாக்கல்

புதுடெல்லி:முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்திய ஐவர் குழு, இந்த வாரத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி முல்லைப் பெரியாறு அணையின் உறுதித்தன்மையை பரிசோதித்து கண்டறிவதற்காக, முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் 5 பேர் கொண்ட உயர் மட்ட குழுவை நியமிக்கப்பட்டு இருந்தது.

இரு மாநில அரசுகளின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விளக்க அறிக்கைகள், மேலும் அணையை ஆய்வு செய்த 8 வல்லுனர் குழுக்களின் அறிக்கைகளை ஐவர் குழு அவ்வப்போது கூடி ஆய்வு செய்து வருகிறது.

நேற்றும் நீதிபதி ஆனந்த் தலைமையிலான ஐவர் குழு டெல்லியில் கூடி ஆய்வு நடத்தியது. இன்றும் ஆலோசனை கூட்டம் தொடர்ந்து நடக்கிறது.

ஐவர் குழு சார்பில் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில்  இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இறுதி அறிக்கை பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்வதாக இருந்தது. பின்னர் ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.

நேற்றைய ஆலோசனை முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய நீதிபதி ஆனந்த், பல்வேறு குழுக்களின் அறிக்கையை ஆய்வு செய்தபின், இந்த வாரத்திற்குள் உச்ச நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார்.