மகிழ்ச்சி! மு.க.ஸ்டாலினுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார் திருமாவளவன்! | Thirumavalavan wishes to M.K.Stalin

வெளியிடப்பட்ட நேரம்: 10:28 (05/01/2017)

கடைசி தொடர்பு:10:47 (05/01/2017)

மகிழ்ச்சி! மு.க.ஸ்டாலினுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார் திருமாவளவன்!

திமுக-வின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் நேற்று தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவருக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல், மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளனர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள, ஸ்டாலின் இல்லத்துக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 

இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், 'திமுகவும், விடுதலை சிறுத்தைகளும் கொள்கை அளவில் ஒத்துப்போகும் கட்சி. ஸ்டாலின் செயல் தலைவரானது மகிழ்ச்சியளிக்கிறது' எனக்கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க