தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் பகீர் நிபந்தனைகள்

நவம்பர் 8-ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இந்தத் திட்டத்தை அமல்படுத்த பரிந்துரைத்த குழுவின் உறுப்பினர்கள் பெயரை வெளியிடக்கோரி, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் சார்பாக  கேட்கப்பட்டது. இந்தக் கேள்விக்கு பிரதமர் அலுவலகத்திலிருந்து வந்த விடை, மக்களிடையே சிறு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்க கலந்தாலோசிக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்கள் பற்றிய விவரம் எதுவும் தங்களிடம் இல்லை என பிரதமர் அலுவலகம் சார்பாக அறிவிக்கப்பட்டது.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் இந்தக் கேள்வியை முன்வைத்த அதே நபர், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மறுசுழற்சி செய்து புதிய நோட்டுகளை புழக்கத்தில் விட எவ்வளவு நாட்கள் ஆகும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 'தகவல் அறியும் உரிமைசட்டத்தின் மூலமாக, அரசு மின்னஞ்சல்கள், அரசு தீர்மான ஆவணங்கள், பொதுமக்களுக்கு அரசு நிறைவேற்றியுள்ள திட்டங்கள் குறித்த ஆவணங்கள், பொது அறிக்கை ஆவணங்கள் பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதுபோன்ற கேள்விகள் தகவல் அறியும் உரிமைச்சட்டதின் வரைமுறைக்குள் அடங்காது' என முன்னாள் தகவல் துறை கமிஷ்னர் சைலேஷ்  காந்தி தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!