திரைப்படத் துறையைச் சேர்ந்த சங்க நிர்வாகிகள் சசிகலாவுக்கு அழைப்பு

சென்னை  - தமிழ்நாடு திரைப்படத் துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை,  அ.தி.மு.க.பொதுச்செயலாளர் சசிகலா தொடங்கி வைக்கவேண்டும் என திரைப்படத் துறையைச் சேர்ந்த சங்க நிர்வாகிகள்,  திரைப்பட இயக்குநர்களான பி.பாரதிராஜா, கே. பாக்யராஜ்; தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத் தலைவர்  விக்ரமன், பொதுச்செயலாளர் ஆர்.கே.செல்வமணி, இணைச் செயலாளர்  லிங்குசாமி, செயற்குழு உறுப்பினர்களான  மனோஜ் குமார்,  ரமேஷ் கண்ணா,  சி. ரங்கநாதன்; தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத் தலைவர்  நாசர்; தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ். தாணு, துணைத் தலைவர்  கதிரேசன், சென்னை மாநகர திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர்  அபிராமி ராமநாதன் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!