வெளியிடப்பட்ட நேரம்: 03:23 (18/01/2017)

கடைசி தொடர்பு:10:59 (18/01/2017)

முதல்வரின் அறிக்கையைப் பொறுத்தே முடிவு: போராட்டக் குழு

சென்னையில் ஜல்லிக்கட்டு தொடர்பாக நடைபெற்ற போராட்ட குழுவினருடனான பேச்சுவார்த்தையில் ஜல்லிக்கட்டு நடத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், மா.ஃபா. பாண்டியராஜன் குழுவினருக்கு உறுதி அளித்தனர். இது தொடர்பாக முதல்வர் பன்னீர்செல்வம் விரிவான அறிக்கையை வெளியிடுவார் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை, மெரினாவின் ஜல்லிக்கட்டு போராட்டக் குழுவோடு தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் மா.ஃபா . பாண்டியராஜன் ஆகியரோடு நடத்திய பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் முடிவில், போராட்டக் குழு, ஜல்லிக்கட்டுக்கு தமிழக முதல்வர் ஆதரவு தெரிவிக்க வேண்டும்,  தமிழக பண்பாடுப் பற்றி தெரியாத பீட்டா அமைப்பு தடை செய்ய வேண்டும். காட்சிப் பட்டியலில் இருந்து காளை மாட்டை நீக்க வேண்டும். அலங்கா நல்லூரில் போராடியவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளைத் திரும்ப பெறுதல்.. உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்திருக்கிறார்கள். மேலும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான நிலைப்பாட்டை தமிழக முதல்வர் ஓ.பி.பன்னீர் செல்வம் நிற்க வேண்டும் என்றனர்.

தங்கள் கோரிக்கைகளைக் குறித்து, 24 மணி நேரத்திற்குள் தமிழக முதல்வர் அளிக்கும் அறிக்கையே போராட்டத்தை தொடருவதா... முடித்துக்கொள்வதா என்பதை முடிவு செய்யும் என்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க