சென்னை கடலில் கொட்டப்பட்ட ஒரு டன் கச்சா எண்ணெய்! அமைச்சர் அதிர்ச்சி தகவல்

Minister Jayakumar

எண்ணூர் அருகே கடந்த சில நாட்களுக்கு முன் இரண்டு சரக்கு கப்பல்கள் மோதிக் கொண்டன. இதில் ஒரு கப்பலில் இருந்து கச்சா எண்ணெய் கடலில் கலந்து, கடல் நீர் மாசடைந்தது. கடலில் எண்ணெய் கலந்ததால் கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்து வருகின்றன.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து, சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், 'இருகப்பல்கள் மோதியதில் ஒரு டன் கச்சா எண்ணெய் கடலில் கொட்டியுள்ளது. கடலில் கலந்துள்ள எண்ணெய் கசிவு பிரச்னையை சரி செய்ய பத்து நாட்கள் ஆகும். இதனால் கடலுக்கு செல்ல முடியாமல், பாதிக்கப்பட்டிருக்கும் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்' என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!