ஸ்டாலினுக்கு முதல்வராகும் தகுதி உள்ளது - ராதாரவி பரபர

Actor Radha Ravi

நடிகரும், வேளச்சேரி தொகுதி திமுக எம்எல்ஏவுமான வாகை சந்திரசேகரின் மகள் சிவநந்தினி திருமணத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள் சிவகுமார், பிரபு, ராதாரவி மற்றும் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ராதாரவி, 'இங்கு வந்துள்ள அனைவரும் ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்று கூறினர். அதற்கான நேரம் வந்துவிட்டது. ஸ்டாலினுக்கு அதற்கான தகுதியும் உள்ளது.பலர் என்னை எப்போது இங்கு வருவீர்கள் என்று கேட்கின்றனர். நேரம் வரும்போது நானும் இங்கு வந்துவிடுவேன்' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!