நந்தினி படுகொலை: குடும்பத்தினருக்கு ஸ்டாலின் நேரில் ஆறுதல் | Stalin personally comfort to Nandini families

வெளியிடப்பட்ட நேரம்: 00:41 (06/02/2017)

கடைசி தொடர்பு:00:34 (06/02/2017)

நந்தினி படுகொலை: குடும்பத்தினருக்கு ஸ்டாலின் நேரில் ஆறுதல்

ஸ்டாலின்

பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட அரியலூரைச் சேர்ந்த நந்தினி இல்லத்திற்கு தி.மு.க.செயல் தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். 

இதையடுத்து, அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட அரியலூர் நந்தினி இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தேன் என்று தெரிவித்துள்ளார். மற்றொரு டுவிட்டில், படுகொலை செய்யப்பட்ட நந்தினி வழக்கில் உரிய நடவடிக்கையை இந்த அரசு எடுக்கத் தவறினால் திமுக சார்பில் நீதிமன்றத்தில் நீதியை நிலை நாட்டுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க