வெளியிடப்பட்ட நேரம்: 23:27 (09/02/2017)

கடைசி தொடர்பு:11:14 (10/02/2017)

திமுகவினர் தனிப்பட்ட கருத்துக்களை வெளியிடக்கூடாது: ஸ்டாலின்

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்

சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அரசுக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி, எவ்வித பிரதிபலனும் இன்றி தி.மு.க ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கருத்து கூறியிருந்தார். 

இக்கருத்து சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், சுப்புலட்சுமி ஜெகதீசனின் கருத்துக்கும் திமுகவிற்கும் உடன்பாடு இல்லை. தமிழகத்தில் தற்போது நிலவும் அசாதாரண அரசியல் சூழல் குறித்து தி.மு.க தலைவரும், பொதுச்செயலாளரும்தான் முடிவு செய்வார்கள். அதுவரை மூத்த நிர்வாகிகள் தனிப்பட்ட முறையில் கருத்துக்களை வெளியிடக்கூடாது என தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க