காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவு கேட்கும் சசிகலா அணி?

ராகுல்காந்தி

பரபரப்பான அரசியல் சூழலில் பன்னீர்செல்வத்துக்கு ஐந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்துள்ள நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியான பிறகு மேலும் பல அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பன்னீர்செல்வம் அணிக்கு செல்லலாம் எனவும், இதனால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்படலாம் எனவும் சசிகலா தரப்பினர் நினைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் சசிகலா தரப்பினர் ஆலோசனை நடத்தியதில் ஒருவேளை இன்னும் 20 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பன்னீர்செல்வம் அணிக்குச் சென்றால், மெஜாரிட்டியை நிரூபிக்க சசிகலா அணிக்கு மேலும் 8 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படும். எனவே காங்கிரஸ் கட்சியில் 8 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால், சசிகலா அணியின் மூத்த நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு கேட்டு அக்கட்சியின் மேலிட நிர்வாகிகளுடன் பேசியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இதனைத் தொடர்ந்து ராகுல்காந்தியின் அழைப்பின் பெயரில், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள் டெல்லி சென்றனர். ராகுல்காந்தி உடனான ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!