"டிரம்பைப் பார்த்துத் திருந்துங்கள்": மோடிக்கு ப.சிதம்பரம் அறிவுரை

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரினுடைய முதலாம் அமர்வு நடைபெற்று முடிந்துள்ளது. ஜனாதிபதியினுடைய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் பற்றி பேசிய பிரதமர் நரேந்திரமோடி, முன்னாள் பிரதமர்களான இந்திரா காந்தி, மன்மோகன் சிங் என வரிசையாக விமர்சித்தார். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பல்வேறு ஊழல்கள் நடந்திருந்தாலும், அப்போது பிரதமராக இருந்த மன்மோகன்சிங் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை.  இதனைச் சுட்டிக்காட்டிப் பேசிய மோடி, ‘ரெயின்கோட் அணிந்து குளிக்கும் கலை மன்மோகனுக்குத் தெரிந்துள்ளது’ என்று விமர்சித்தார். இதனைத் தொடர்ந்து மன்மோகன் சிங் பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது பல தனிப்பட்ட முரண்பாடுகள் இருந்தாலும் கூட அவர் தமது முதலாவது உரையில் முன்னாள் அதிபர் ஒபாமாவைப் பாராட்டித்தான் பேசினார். அதனால் டிரம்ப்பைப் பார்த்துத் திருந்த வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!