வெளியிடப்பட்ட நேரம்: 00:46 (15/02/2017)

கடைசி தொடர்பு:15:32 (15/02/2017)

"மக்களின் வரிப்பணம்தான் வீணாகிறது" - நடிகர் அரவிந்த்சாமி ட்வீட்..!

கூவத்தூர் ரிசார்ட்டில், சசிகலாவுக்கு ஆதரவு தருவதாக கூறி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த சில நாட்களாக ஒன்றாக தங்கியுள்ளார்கள். இதற்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் விமர்சனம் வைத்தனர். இந்நிலையில், நடிகர் அரவிந்த்சாமியும் இதுகுறித்து தனது கருத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். "தனியார் விடுதியில் விடுமுறை எடுத்து பொழுதை கழிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க ஏராளமான காவல்துறையினர் விடுதியின் முன்பு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மக்களின் வரிப்பணம்தான் வீணாகிறது." என பதிவிட்டுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க