"இந்த தீர்ப்பால் இனி தமிழ்நாட்டில் அராஜகம் இருக்காது" - சசிகலா புஷ்பா எம்.பி நச்..!

சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் வெளியான நிலையில் சசிகலா புஷ்பா எம்.பி தனது கருத்தினை தெரிவித்துள்ளார். அதில் "குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில காலமாக அராஜக போக்கு இருந்தது. அதை யார் தடுப்பது என்ற நிலை இருந்தபோது ஒரு பெண்ணாக இருந்து அத்தனை பிரச்னைகளுக்கும் நான் குரல் கொடுத்தேன். இந்த தீர்ப்பால் இனி தமிழ்நாட்டில் அராஜகம் இருக்காது, குடும்ப அரசியல் இருக்காது என்ற நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது. ஜெயலலிதாவிடம் இருந்து அரசியல் அனுபவம் பெற்றவர் ஓ.பன்னீர்செல்வம். அவரால் சிறந்த முதலமைச்சராக இருக்க முடியும். அவருக்கு ஏற்கெனவே ஆதரவு தெரிவித்து விட்டேன்."  என்று சொத்துகுவிப்பு வழக்கு தீர்ப்புக்கு தனது கருத்தைச் சொல்லி இருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!