இனி எத்தனை நாட்கள் ரிசார்ட்டில் தங்குவோமோ? - எம்.எல்.ஏ.க்கள் புலம்பல்!

ஒ.பன்னீர்செல்வம் அணிக்கு யாரும் தாவிவிடக்கூடாது என்பதற்காகவும், தான் முதல்வர் பதவியேற்க எந்த தடையும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவும், சென்னை அருகில் உள்ள  கூவத்தூரில் சொகுசு விடுதியில் அதிமுக எம்.எல்.ஏ-க்களை தங்க வைத்திருந்தார், சசிகலா. இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் வந்தது. இந்த தீர்ப்பு சசிகலாவுக்கு சாதகமாக வரும் என நினைத்திருந்ததால், நேற்று மாலையே இந்த சொகுசு விடுதியில் தங்கி இருந்த எம்.எல்.ஏ.க்கள்  வெளியே வர ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், இந்த தீர்ப்பு வேறுவிதமாக அமைந்ததால், இவர்கள் போட்டு வைத்திருந்த ப்ளான் அனைத்தும் தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. சசிகலா விருப்பத்தின்படி, எடப்பாடி பழனிச்சாமி முதல்–அமைச்சராக பதவி ஏற்கும் வரையிலோ அல்லது ஆளுநர் தனது கருத்தை தெரிவிக்கும் வரையிலோ எம்.எல்.ஏ.க்கள் இந்த சொகுசு விடுதியிலேயேதான் தங்கி இருப்பார்கள் என்று அ.தி.மு.க-வைச்  சேர்ந்தவர்கள்  சொல்கிறார்கள். 'இன்னமும் எத்தனை நாட்கள் இங்க இருக்க வேண்டுமோ?' என சில எம்.எல்.ஏ-க்கள் இப்போது  புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!