வெளியிடப்பட்ட நேரம்: 05:45 (15/02/2017)

கடைசி தொடர்பு:14:28 (15/02/2017)

"தமிழக நிகழ்வுகளுக்கும், பா.ஜ.க-வுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது" - அருண் ஜெட்லி விளக்கம்

சசிகலா உள்ளிட்ட மூவருக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய  தீர்ப்பை அடுத்து தமிழகத்தில் மாறிவரும் அரசியல் சூழல் குறித்து மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தனது கருத்தை நிருபர்களிடம் தெரிவித்து இருக்கிறார். “தமிழ்நாட்டில் சமீப காலமாக நடந்து வருகிற அரசியல் நிகழ்வுகள், அ.தி.மு.க.வின் தனிப்பட்ட விவகாரம். இந்த நிகழ்வுகளுக்கும் பா.ஜ.க-வுக்கும், மத்திய அரசுக்கும் எந்தவித சம்பந்தமும்  இல்லை. அவர்கள் தங்களது தலைவரை எப்படி தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது அவர்களது உள்கட்சி விவகாரம். தமிழக ஆளுநர்  அரசியல் சாசனப்படி தேவையான நடவடிக்கையை எடுப்பார்" என்று தெரிவித்து இருக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க