அரசியல் பரமபதத்தில் ஏணியில் ஏறியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. முதல்வர் ஜெயலலிதா மறைவின் போதே முதல்வராக பொறுப்பேற்க இருக்கிறார் என்று முணுமுணுக்கப்பட்டது. பின் அந்த சொற்கள் காற்றில் கரைந்து போனது. அதன்பின் தமிழக அரசியல் களத்தில் நடந்த நிகழ்வுகள் அந்த சொற்களை உயிர்ப்பித்து, அவரை முதல்வராக அரியணை ஏற்றி இருக்கிறது.
சரி... யார் இந்த எடப்பாடி பழனிசாமி... எப்படி பல சீனியர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு முதல்வர் பதவிக்கு முன்னேறினார்...?

மந்திரி தந்திரி
2011-2016 அதிமுக ஆட்சியில் நடந்த தில்லுமுல்லுகளை ஆனந்த விகடன் மந்திரி தந்திரி மூலம் மக்களுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டியது.
அன்று எடப்பாடி எட்டுப்பட்டிக் கவுண்டர் தெருக்கள் பரபரப்பாக இருந்தன. ஊரில் மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் பதற்ற முணுமுணுப்புகள். நெடுங்குளம் கிராமமே பதற்றச் சூறாவளியின் பிடியில் இருந்தது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர், ஈட்டியால் சரமாரியாகக் குத்திக் கொல்லப்பட்டதும், அதைச் செய்தவர்கள் அதே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே என்பதும்தான் அத்தனை அமளிதுமளிகளுக்கும் காரணம். அந்தக் கொலைகளுக்குக் காரணமானவர்கள் எனத் தேடப்பட்டவர்கள் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளுக்குள் மாயமாகிப்போனார்கள். அவர்களில் அந்த இளைஞரும் ஒருவர்.

என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி (எடப்பாடி)
சக்கரை மூட்டை இருக்கா?’, ‘சக்கரை மூட்டை இருக்கா?’ என்று கூவியவாறு சர்க்கரை மூட்டைகளை வாங்கிக் கொண்டிருந்தவர்... பங்காளியோடு வாய்க்கால் வரப்புச்சண்டையில் ஈடுபட்டு, இருவரைக் கொலைசெய்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாக இருந்தவர்... காவல் துறைக்குப் பயந்து மேற்குத்தொடர்ச்சி மலையில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர்... அது எல்லாம் ஒரு காலம். இன்றைக்கு, போலீஸ் பாதுகாப்போடு, சிவப்பு விளக்குச் சுழலும் சொகுசுக் காரில் வலம் வருகிறார். அவர்தான், தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி.
ஓ.பி.எஸ்ஸை பின்தொடரும் எடப்பாடி பழனிச்சாமி! -மூவரணியின் விஸ்வரூபம்
எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவின் விசுவாசியாக வலம் வந்த எடப்பாடி பழனிச்சாமி, சசிகலாவின் நம்பிக்கைக்குரியவராக வலம் வருகிறார். ' தற்போது முதல்வரின் துறைகளை கவனித்து வரும் ஓ.பி.எஸ்ஸை கண்காணிப்பதுதான் எடப்பாடிக்கு முழுநேர வேலையாக இருக்கிறது' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.
