வெளியிடப்பட்ட நேரம்: 01:07 (17/02/2017)

கடைசி தொடர்பு:15:08 (17/02/2017)

ஓ.பி.எஸ் மற்றும் ஹெச்.ராஜா அவசர சந்திப்பு!

 தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுள்ளார். அத்துடன் புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அனைவரும் பதவியேற்றுள்ளனர். ஆளுநர் வித்யாசாகர்ராவ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதற்கிடையே சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. அதில் ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இதற்கிடையே பன்னீர் செல்வத்தை பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். வரும் சனிக்கிழமை சட்டசபை கூடும் நிலையில் இந்த சந்திப்பானது முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க