"சிறைக்குள் இருந்து தமிழக அரசு இயங்கும்" - நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ

தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைந்திருப்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தனது வலைப்பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “தமிழர்களே, உங்களுக்குப் பாராட்டுகள். ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒருவரால் சிறைக்குப் பின்னால் இருந்து இயக்கப்படும் ஒரு அரசாங்கத்தை 4 ஆண்டுகள் பார்க்கப்போகிற சிறப்பான தருணத்தை அடைந்திருக்கிறீர்கள். கே.பழனிச்சாமி சிறையில் இருந்து கட்டளைகளைப் பெற்று நிறைவேற்றுவார். ஆனாலும் தமிழர்கள் கவலைப்பட வேண்டாம். ஏற்கெனவே இப்படி மாநிலத்தில் முன்னுதாரணமாக நடந்திருக்கிறது” என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!