வெளியிடப்பட்ட நேரம்: 02:36 (18/02/2017)

கடைசி தொடர்பு:08:28 (18/02/2017)

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பார்கள் - பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் அறிவிப்பு!

தமிழக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இந்நிலையில், தி.மு.க அவருக்கு எதிராக வாக்களிப்பதாக அறிவித்தது. இருந்தாலும், தி.மு.க-வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் இன்று தனது முடிவைச் சொல்வதாக அந்தக் கட்சியின் தமிழகத் தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்தார். பெரும்பான்மை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பார்கள் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் அறிவித்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க