Published:Updated:

'இன்னிக்கும் நீங்கதான்ணே முதல்வர்..!' - எடப்பாடியாரின் கொக்கிபீடியா பக்கம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
'இன்னிக்கும் நீங்கதான்ணே முதல்வர்..!' - எடப்பாடியாரின் கொக்கிபீடியா பக்கம்!
'இன்னிக்கும் நீங்கதான்ணே முதல்வர்..!' - எடப்பாடியாரின் கொக்கிபீடியா பக்கம்!

'இன்னிக்கும் நீங்கதான்ணே முதல்வர்..!' - எடப்பாடியாரின் கொக்கிபீடியா பக்கம்!

ட்டற்ற 'கலாய்'க்களஞ்சியமான கொக்கிபீடியாவில் இருந்து எடப்பாடியாரைப் பற்றிய அற்புத தகவல்களைத் தெரிந்துகொள்ளுங்களேன்... 

பெயர் : எடப்பாடி கே.பழனிசாமி

பிறப்பு : மார்ச் -02, 1954.

இருப்பிடம் : அன்று எடப்பாடி, இன்று சென்னை.

பொறுப்பு : தமிழக முதல்வர்

வகித்த பதவிகள் : எம்.பி., எம்.எல்.ஏ., அமைச்சர்.

எடப்பாடி கே. பழனிசாமி என்பவர் 'அம்மா' ஆன்மாவின் ஆணைக்கிணங்க அ.தி.மு.க-வின் அடிமட்டத்திலிருந்து அனாயசமாக வளர்ந்து 'சின்னம்மா'வின் ஆணைக்கிணங்க தமிழகத்தின் முதல்வராகப் பதவியேற்றவர் ஆவார். 

சாதனைகள் :

இரண்டு வருடத்தில் மூன்றாவது முதல்வரைப் பார்க்கும் பாக்கியத்தை மொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் அளித்தது வியத்தகு சாதனை. ஜெயலலிதாவின் அமைச்சரவையில் கும்பிடு குருசாமிகளில் ஒருவராக இருந்து, 'சின்னம்மா' அணியில் எக்குத்தப்பு சித்தப்புவாக உள்ளே நுழைந்து, சீனியர்களை ஓரங்கட்டி முதல் வரிசைக்கு வந்தது வாழ்நாள் சாதனை. 'சின்னம்மா'வுக்கு ஏழரை சுற்றிவளைக்க, திடீரென சட்டசபைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்த மூன்றே நாட்களில் முதல்வராகப் பதவியேற்று இவர் ஏறியது சூப்பர்ஃபாஸ்ட் எஸ்கலேட்டர்.

நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தபடி முதல்வர் சீட்டுக்கே ஸ்ட்ரைட் ரோடு போட்டவர் என சிலாகிக்கிறது அ.தி.மு.க தொண்டர் படை.  கொங்கு மண்டலத்தின் one of the powerful leaders ஆக இருந்தவர்  the one and only leader ஆக மாறி, தமிழ்நாட்டின் முதல்வராக சார்ஜ் எடுத்துக் கொண்டதுதான் சமீபத்திய சாதனை. தூக்கிவிட்ட தூண்களை ஓரம்கட்டி விளையாடும் அரசியல் பரமபதத்தில் அண்ணன் இப்போது அசத்தல் ஆல்ரவுண்டர். எம்.எல்.ஏ-க்களைச் சரிகட்டுவது, மூத்த அமைச்சர்களுக்குக் காப்புக் கட்டுவது, நீதித்தாயின் கண்களில் கறுப்புத்துணி கட்டுவது என ரவுண்டு கட்டி அடிப்பதில் கில்லாடி. 2011-ல் சின்னதாக இருந்த இவரது விக்கிபீடியா பக்கத்தை கடந்த ஒருவாரத்தில் மட்டும் 80 பேருக்கு மேல் எடிட் செய்யத் துடியாய்த் துடித்ததிலிருந்தே இவரது பெருமையை அறியலாம். 

வேதனைகள் :

சாதனைகளை விட சொல்ல முடியாத வேதனைகள்தான் நம்ம ஆளுக்கு ஏராளம். 'சின்னம்மா'வை முதல்வராக்க தமிழ் சினிமா பாணியில் எம்.எல்.ஏ-க்களை மொத்தமாக அழைத்துப்போய் ஜாலியாக கண்ணாமூச்சி விளையாடியவரை, 'எம்.எல்.ஏ-க்களைக் கடத்திவைத்திருப்பதாக' 'பொய்' வழக்குப் போட்டு வைத்திருக்கிறது காவல்துறை. இளம் வயதிலேயே குடும்பத் தகராறில் சிலரைப் போட்டுத் தள்ளியதாகவும் அண்ணனின் கணக்கில் சிலபல கரும்புள்ளிகள். முதல்வராகப் பதவியேற்ற நாள்முதல் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் என வறுத்தெடுக்கும் ஃபார்வர்டு மெசேஜ்கள், எடப்பாடிக்கு எதிராக கவர்னருக்குக் குவியும் மெயில்கள் என எல்லாத்தையும் பார்த்ததும்தான் லேசாகத் தொண்டையைக் கவ்வுகிறதாம். 

டீமானிட்டைசேஷன் சமயத்தில் இவரது பினாமி வீடுகளில் எக்கச்சக்க பணம் கைப்பற்றப்பட்டதைப் பார்த்து 'நாங்க ஏ.டி.எம்ல நிக்கையிலே அங்க கட்டுக்கட்டா காசா... ஏ பஞ்சாயத்தே...' எனக் கொதித்தது தமிழகம். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர், பழனிசாமியின் அண்ணன் வீட்டருகே சைக்கிளில் இருந்து இறங்காமல் சென்றார் என்பதற்காக, அவரது அண்ணன்  அவரைக் கட்டிப் போட்டு அடித்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருவதை நினைத்துக் குடும்பமே கமுக்கமாய்க் கதறுகிறதாம். தனது பதவி பறிபோனதாகத் தினமும் கனவு வருவதால் 'இன்னிக்கும் நீங்கதாண்ணே முதலமைச்சர்' எனக் காலையிலேயே சொன்னால்தான் கண்ணை முழிப்பேன் என அடம் பிடிக்கிறாராம். நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை, கோகோ-கோலா கம்பெனிக்கு அனுமதி வழங்கியதில் ஊழல் என  இவர் கை வைக்கும் இடமெல்லாம் கண்ணிவெடி வெடித்தது முரட்டு வேதனை. 

மேலும் பார்க்க :

கபாலி - தி பொலிடிக்கல் வெர்ஷன்.

வெல்ல வியாபாரி வெள்ளை சொக்கா போட்ட கதை.

பழனிசாமி வீட்டில் பல கோடி பதுக்கல். 

மேலும் படிக்க :

சாலைகளில் பள்ளம்... சாதித்தது என்ன?

- விக்கி 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு