வெளியிடப்பட்ட நேரம்: 05:24 (22/02/2017)

கடைசி தொடர்பு:17:09 (22/02/2017)

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான ஸ்டாலினின் வழக்கு மீது இன்று விசாரணை.

சட்டசபையில் நடந்த பெரும் கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியல், முதல்வர் எடப்பாடி.பழனிசாமி, கடந்த 18-ம் தேதி அன்று தன்னுடைய பெரும்பான்மையை நிரூபித்தார். இதையடுத்து, தமிழக சட்டசபையில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக் கோரி, மு.க.ஸ்டாலின் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சட்டப்பேரவையில் நடந்த கூச்சல், குழப்பங்கள் காரணமாகவும், சபாநாயகர் இருமுறை நம்பிக்கை வாக்கெடுக்கும் தீர்மானத்தை முன் மொழிந்ததாலும் இந்த வாக்கெடுப்பு செல்லாது என மனு அளித்தி ருந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை, இன்று காலை உயர் நீதிமன்றத்தில் நடத்தப்பட இருக்கிறது.மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையில் நடைபெற இருக்கும் இந்த விசாரணை, அதிக முக்கியத்துவம்பெற்றுள்ளது.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க