நிறம் மாறுகிறதா அ.தி.மு.க | Will ADMK's official colour Changed

வெளியிடப்பட்ட நேரம்: 06:33 (24/02/2017)

கடைசி தொடர்பு:08:31 (24/02/2017)

நிறம் மாறுகிறதா அ.தி.மு.க

'எங்கும் பச்சை, எல்லாம் பச்சை' என்று அ.தி.மு.க கட்சியின் அடையாளங்களில் ஒன்றாகிப்போனது, பச்சை நிறம். அதற்குக் காரணம், முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க - வின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு ராசியான நிறம் பச்சை என்பதால், அ.தி.மு.க-வினரும் பச்சை நிறத்தையே தங்களுக்கு ராசியான நிறமாகக் கருதிவந்தனர். 

ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு, பச்சை நிறத்துக்கான முக்கியத்துவம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவருகிறது. குறிப்பாக சசிகலாவுக்கு  ராசியான நிறம், பிங்க் என்று கூறப்படுகிறது. அ.தி.மு.க-வில் போர்க்கொடிதுாக்கிய பன்னீர்செல்வம், நாளை ஆர்.கே.நகரில் நலத்திட்ட உதவிகள் வழங்வதோடு, பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இந்தக் கூட்டத்திற்காக அடிக்கப்பட்ட போஸ்டர்கள், ஊதா நிறத்தில் உள்ளன. ஜெயலலிதாவின் படத்தோடு ஊதா நிறத்தில் இந்த போஸ்டர்கள் பளிச்சிடுகின்றன. பன்னீர்செல்வத்துக்கு ராசியான நிறம் ஊதா என்பதால்தான் போஸ்டர்கள்  இப்படி உள்ளன என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close