Published:Updated:

புதுக்கோட்டை தேர்தல்: ரசிகர் மன்ற நிர்வாகி போட்டியிட ரஜினி எதிர்ப்பு!

புதுக்கோட்டை தேர்தல்: ரசிகர் மன்ற நிர்வாகி போட்டியிட  ரஜினி எதிர்ப்பு!
புதுக்கோட்டை தேர்தல்: ரசிகர் மன்ற நிர்வாகி போட்டியிட ரஜினி எதிர்ப்பு!
புதுக்கோட்டை தேர்தல்: ரசிகர் மன்ற நிர்வாகி போட்டியிட  ரஜினி எதிர்ப்பு!

சென்னை:புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிடும் ரசிகர் மன்ற நிர்வாகிக்கு நடிகர்  ரஜினிகாந்த் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு,மனுவை வாபஸ் பெறுமாறு மன்ற  நிர்வாகிகள் மூலம் வலியுறுத்தியுள்ளதாக தெரிகிறது.

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் ஜூன் 2ம் தேதி  நடைபெறுகிறது.இங்கு அ.தி.மு.க.வும், தே.மு.தி.க.வும் நேரடியாக  போட்டியிடுகிறது.இதர கட்சிகள் தேர்தலை புறக்கணித்து விட்டன.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற செயலாளர்  ஸ்ரீதர்,இத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். ரஜினி ரசிகர்களை  திரட்டி ரஜினி மன்ற பெயரிட்ட பேனர், மற்றும் கொடியுடன் ஊர்வலமாக சென்று  மனுவை தாக்கல் செய்தார்.

இது குறித்த தகவலறிந்த ரஜினி அதிர்ச்சியடைந்தார்.ரஜினி ரசிகர்கள் மன்றம் பெயரில்  புதுக்கோட்டையில் போட்டியிட ஸ்ரீதர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதை ரஜினி  ஏற்கவில்லை என்றும்,வேட்பு மனுவை வாபஸ் பெறும்படி மன்ற நிர்வாகிகளுக்கு அவர்  உத்தரவிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இதனால் ஸ்ரீதர் தனது வேட்பு  மனுவை வாபஸ் பெறுவார் என்று தெரிகிறது.

இது குறித்து ரஜினி ரசிகர் மன்ற பொறுப்பாளர் சுதாகர் கூறுகையில்,”ரஜினி ரசிகர்  மன்றம் சார்பில் ஸ்ரீதர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ள தகவலை பத்திரிகை மூலம்  அறிந்தோம். நான் அவரிடம் ரஜினி பெயரையோ ரசிகர் மன்றத்தின் பெயரையோ மன்ற  கொடியையோ பயன்படுத்தி தேர்தலில் நிற்ககூடாது என்று கூறி இருக்கிறேன்.

ரஜினி மன்ற உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் தேர்தலில் நீற்கலாம். அரசியல்  கட்சிகளுக்கு தேர்தல் வேலையும் செய்யலாம். ஆனால் அவர்கள் ரஜினி பெயரையோ,  மன்ற கொடியையோ பயன்படுத்தக்கூடாது. ரசிகர்கள் அவர்களின் குடும்பத்தை கவனிக்க  வேண்டும் என்பதில்தான் ரஜினி அக்கறையுடன் இருக்கிறார்”என்றார்.

ஆனால், வேட்பு மனு தாக்கல் செய்தது தான் எடுத்த முடிவு அல்ல  என்றும்,மாவட்டத்தில் உள்ள அனைத்து ரஜினி ரசிகர்களும் கூடி எடுத்த முடிவு என்றும்  ஸ்ரீதர் கூறியுள்ளார்.