வெளியிடப்பட்ட நேரம்: 04:37 (25/02/2017)

கடைசி தொடர்பு:04:37 (25/02/2017)

ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார்- ஸ்டாலின் நம்பிக்கை!

டெல்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து தமிழக சட்டபேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடைபெற்ற விவகாரங்களை புகாராக அளித்துவிட்டு, காங்கிரஸ் தலைவர் சோனியாக காந்தி, துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்த ஸ்டாலின் இன்று இரவு சென்னை திரும்பினார். 

டெல்லி பயணம் முடித்து சென்னை திரும்பிய பின் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் “ ஜனாதிபதியிடம் நாங்கள் கொடுத்த புகாரை முழுமையாக பார்ததுள்ளார்.உ ரிய நடவடிக்கை எடுக்கபடும் என்று சொல்லியுள்ளார். சோனியாவையும், ராகுல்காந்தியையும் மரியாதை நிமித்தமாக தான் சந்தித்தோம். அவர்கள் தலைவர் கலைஞரின் உடல்நிலை பற்றி கேட்டறிந்தார்கள்” என்று தெரிவித்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க