'எம்ஜிஆர் அம்மா தீபா பேரவைக்கு நான்தான் செயலாளர்' - தீபா | Am the secretary for MGR Amma Deepa Peravai, Says Deepa

வெளியிடப்பட்ட நேரம்: 15:26 (26/02/2017)

கடைசி தொடர்பு:15:23 (26/02/2017)

'எம்ஜிஆர் அம்மா தீபா பேரவைக்கு நான்தான் செயலாளர்' - தீபா

தீபா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 'எம்ஜிஆர் அம்மா தீபா பேரவைக்கு இனி நான் தான் செயலாளர். பேரவையின் தற்காலிக செயலாளராக நான் இருப்பேன். கட்சியின் கொள்கைகள் மற்றும் நிர்வாகிகளின் பட்டியலை நாளை வெளியிடுவோம். அதன் பிறகு எனது அரசியல் அறிக்கைகளை எதிர்பார்க்கலாம். தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க திட்டமிட்டு உள்ளேன். தீபக்கை சசிகலா குடும்பம் பின்னால் இருந்து இயக்கி வருகிறது.

Deepa

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்தது, மரியாதை நிமித்தமாகதான். அவருடன் இணைந்து பணியாற்றுவது குறித்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் ' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க