வெளியிடப்பட்ட நேரம்: 11:16 (27/02/2017)

கடைசி தொடர்பு:11:24 (27/02/2017)

குடியரசுத் தலைவரைச் சந்திக்கும் பன்னீர்செல்வம் அணி!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்பி-க்கள், ராஜ்யசபா எம்பி மைத்ரேயன் தலைமையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை நாளை சந்திக்க உள்ளனர்.

பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமாசெய்த பிறகு, சசிகலாவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தார். மேலும், ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது என்றும் தெரிவித்த அவர், அதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியேற்ற பின், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்துவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தி, பன்னீர்செல்வம் ஆதரவு எம்பி-க்கள், நாளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைச் சந்திக்க உள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க