வெளியிடப்பட்ட நேரம்: 20:14 (01/03/2017)

கடைசி தொடர்பு:20:21 (01/03/2017)

ஆதீனத்தின் அடுத்த வாரிசு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி..!? - எப்படி?

ரே மாதிரி உலகத்தில் ஏழு பேர் இருப்பாங்கனு எதுக்காக, யாரு, எப்படி அடிச்சு விட்டாய்ங்களோ தெரியலை. ஆனா, ஒரேமாதிரி குணநலன்களோட இருக்கிற அரசியல்வாதிகள் சமகாலத்திலேயே இருக்காங்க. தேசிய அரசியலில் சுப்பிரமணியன் சுவாமி எல்லோரையும் இழுத்துப்போட்டு அடிக்க, அவரை நம்ம ஆட்கள் சகட்டுமேனிக்கு அடிச்சித் துவைச்சுக்கிட்டு இருக்காங்க.  இந்தப்பக்கம் அதே வேலையை டெண்டர் எடுத்துப் பலபேர் பார்த்துக்கிட்டு இருக்காய்ங்க. அதற்கு வாழும் உதாரணம் அண்ணன் வைகோ, ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட பலர்.

ராஜேந்திரபாலாஜி - மதுரை ஆதீனம்

கொள்கை, கோட்பாடுகளில் வேறவேற மாதிரி இருந்தாலும் (அப்படி ஒண்ணு இருந்துச்சுனா..!) சில நேரங்களில் இப்படி ஆளுக்காளு ஒற்றுமைகளோடு இருக்காய்ங்கனு நினைச்சாவது சந்தோசப்பட்டுக்கலாம் மக்கழே... ஆனா பாருங்க, அ.தி.மு.க வில் இருப்பவர்கள் இன்னும் உச்சபட்சமாக, 'சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை' கணக்கா எல்லோரும் ஒரே நேரத்துல ஒரே மாதிரி கூவுவாங்க. 'அம்மாவுக்குப் பின் சின்னம்மா நீயே... நீ தலைமையேற்கக் காத்திருக்கிறோம் தாயே..!'னு தமிழ்நாடு முழுக்கப் போட்டி போட்டுக்கிட்டுப் பேனர் வெச்சவிங்க எல்லோரும் வேற யாருன்னு நினைச்சீக... இவிங்கதேன்!

லிவிங்ஸ்டன் இன் மதுரை ஒருத்தர் (இவரை அ.தி.மு.க வின் தீவிர அனுதாபின்னே வெச்சுக்கலாம்) அ.தி.மு.க பொதுக்குழு, செயற்குழுக் கூட்டங்களில் மட்டும்தான் கலந்துக்க மாட்டார். மற்றபடி அந்தக் கட்சிக்குப் பொதுச் செயலாளர் முதல் கிளைச்செயலாளர் வரை யாரை நியமிச்சாலும் இவரே சிவபெருமான் ஆசிர்வாததோட நேர்ல போய் ஆசிவாதம் பண்ணுவார். சிவனோட ஆதிவாசி கேரக்டர்லேருந்து, அவரோட ட்வின் பிரதர் கம் தூரத்து உறவினர் 'ஆதியோகி' வரையும் அவர் கனவில் வந்து சொன்னாதான் காலையில பல்லே துலக்குவார்.

மேற்சொன்ன ருத்ராட்ச சாமியின் கெஸ்ட் அப்பியரன்ஸை காலி பண்றதுக்காக உட்கட்சிக்குள்ளேயே வாரிசுகள் உருவாகிட்டு வர்றாங்க. இப்போ நடந்த கட்சிக் கூட்டத்தில் பால்வளத் துறை அமைச்சர்  கே.டி. ராஜேந்திரபாலாஜி இப்போ என்ன சொல்லியிருக்கார்னா... 'ஸ்டாலின் ஜாதகத்தையே மல்லாக்கப் படுக்கப்போட்டு அலசிப் பார்த்தாச்சு. அவருக்கு முதல்வர் ஆகுற யோகமே இல்லை. அப்புறம் எதுக்கு சும்மா விளையாடிக்கிட்டு. ஆட்டத்தை டிக்ளேர் பண்ணிட்டுப் போங்கப்பு'னு அரசியல் ஆட்டத்தையே மொத்தமா கலைச்சுவிடப் பார்த்திருக்கார். 'ஆமா இவர் மட்டும் அடுத்த நாடாளுமன்றத் தேர்தல்ல நாடுபூராம் ஜெயிச்சு பிரதமராகப் போறார்... போவியா...'னு உடன்பிறப்புகள் ஒருபக்கம் கலாய்ச்சு விடாம இருக்கணும்.

இவர் மட்டும்தான் இப்படியானு பார்த்தா சமீபத்திய வரலாறு சந்தி சிரிக்குது. இதே கேரக்டர் ரோலைச் சுமந்துக்கிட்டு இங்கேதான் நிறைய ஜூனியர் ஆர்டிஸ்ட்கள் சுத்துறாங்களே... 'அம்மா' ஆன்மா வந்து உத்தரவு கொடுத்ததாகச் சொல்லி ஜெயலலிதா சமாதியில் போய் அமர்ந்து நெற்றிக்கண்ணைத் திறந்தார் ஓ.பன்னீர்செல்வம். ஜெயிலுக்குப் போறதுக்கு முன்னாடி ஆன்மா மேலே ஆணையாக 'அடிச்சு' சபதம் எடுத்தார் சசிகலா. அடுத்து 'சின்னம்மா' கனவில் வந்து சொன்னதாக யாராவது கிளம்பி வந்திடுவாய்ங்களோனு நினைச்சாதான் பீதியாகுது. ஒருவேளை அந்தக் 'கனவு' புகழ் ஆதீனமே இங்கேயும் வந்திடுவாரோ..?

- விக்கி 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்