வெளியிடப்பட்ட நேரம்: 03:48 (06/03/2017)

கடைசி தொடர்பு:07:49 (06/03/2017)

"ஜெ.வீட்டு பணிப்பெண் எங்கே?" - ஓ.பி.எஸ் வீட்டில் விடிய விடிய ஆலோசனை!

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

ஜெயலலிதா மரணத்தில் சி.பி.ஐ. விசாரணை கேட்டு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்து வருகிறார். சென்னை அடையாறு கிரீம்ஸ் சாலையில் உள்ள ஓ. பன்னீர்செல்வத்தின் வீட்டில், தனது ஆதரவாளர்களுடன் விடிய விடிய ஆலோசனையில் ஈடுபட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், ஆலோசனைக் கூட்டம் குறித்த தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். "நேற்று இரவிலிருந்து இப்போ வரைக்கும் கூட்டம் நடந்துட்டு இருக்கு. கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், 'அப்போலோ மருத்துவமனையில் என்ன  நடந்தது என்பதை மத்திய-மாநில அரசுகள் விளக்க வேண்டும். முதலமைச்சர் ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்த்ததாகவும், பேசியதாகவும் சிலர் சொல்வது தவறு. அவரைப் பார்க்க யாரையும் அனுமதிக்கல'ன்னு சொன்னாரு. 

உடனே மாஃபா பாண்டியராஜன், 'ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட வேண்டும்' என்றார். மேட்டூர் தொகுதி எம்எல்ஏ செம்மலை, 'ஜெயலலிதா கீழே தள்ளிவிடப்பட்டு மயக்கமடைந்த காரணத்தால்தான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருடைய மரணத்தில் மர்மம் இருக்கிறது' என்று சொன்னார். உடனே பொன்னையன், 'ஜெயலலிதா கீழே தள்ளிவிடப்பட்டதை நேரில் பார்த்த பணிப்பெண்ணை இதுவரையில் காணவில்லை. அவர் இருக்கும் இடமும் தெரியல'ன்னு சொன்னாரு." எனக் கூறினார்.  

- ந.பா.சேதுராமன் 

நீங்க எப்படி பீல் பண்றீங்க