வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (06/03/2017)

கடைசி தொடர்பு:16:53 (06/03/2017)

உண்ணாவிரதத்துக்கு அனுமதி கேட்டு பன்னீர்செல்வம் அணியினர் டி.ஜி.பி.யிடம் மனு!

ஜெயலலிதா மரணத்தில் உள்ள உண்மை வெளிவர வேண்டும் என்பதே எங்களுடைய குறிக்கோள் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக மத்திய அரசு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஓ.பன்னீர்செல்வம் அணியினர் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தெரிவித்துள்ளனர். உண்ணாவிரதத்துக்கு அனுமதி கேட்டு சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ் மற்றும் டிஜிபி ராஜேந்திரனை சந்தித்தனர்.

சந்திப்புக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி,  ''சென்னையில் நடைபெறவுள்ள உண்ணாவிரதத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பார். மாவட்ட நிர்வாகிகள் அந்தந்த மாவட்டங்களில் காவல்துறை அனுமதி பெறுவர் என்றார். உடனிருந்த நத்தம் விஸ்வநாதன், ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது, அவரை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்த்தாரா என்று கேள்வி எழுப்பினார். மேலும் விசாரணை ஆணையம் அமைத்தால் விஜயபாஸ்கரும் விசாரிக்கப்படுவார்'' என்றார்.

படம்: ஜெரோம்

நீங்க எப்படி பீல் பண்றீங்க