ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் 122 அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள்! நடிகர் ஆனந்தராஜ் ஆதங்கம்

'122 எம்.எல்.ஏ.க்கள் ஒரு குடும்பத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பது மக்கள் விரோதம் என்று நடிகர் ஆனந்தராஜ் தெரிவித்தார்.

ஜெயலலிதா இறப்பிற்குப் பிறகு அ.தி.மு.க சசிகலாவின் கட்டுப்பாட்டுக்குச் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் ஆனந்தராஜ் அதிமுகவில் இருந்து வெளியேறினார். மேலும் அதிமுகவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளையும் கூறி வருகிறார்.

இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ஆனந்தராஜ், 'ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள உண்மைகள் வெளிவர வேண்டும். குடும்பத்தின் பிடியில் ஆட்சி இருக்காது என்று தினகரன் கூறுவது ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை. 

'அதிமுகவை பிளவுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதிமுகவில் உட்கட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். 122 எம்.எல்.ஏ.க்கள் ஒரு குடும்பத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பது மக்கள் விரோதம். பெரும்பான்மை வாக்கெடுப்பின்போது சபாநாயகர் தனபால் கடமை தவறிவிட்டார்' என்று தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!