பன்னீர்செல்வம் அணி நாளை 36 இடங்களில் உண்ணாவிரதம்!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை கோரி நாளை தமிழகம் முழுவதும் 36 இடங்களில் இடங்களில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்தார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் தொடர்ச்சியாக நீதி விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். உண்ணாவிரதத்துக்கு தமிழக காவல்துறைத் தலைவர் ராஜேந்திரன் அனுமதி வழங்கியுள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன், 'ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை கோரி நாளை தமிழகத்தில் 36 இடங்களில் உண்ணாவிரதம் நடைபெறும். ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்த தகவல்களில் உடன்பாடில்லை.

ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அவரது உடல்நிலை குறித்து மூத்த அமைச்சர்களுக்கு தகவல் வழங்கப்படவில்லை. தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டது கடும் கண்டனத்துக்குரியது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு கடிதம் எழுதுவதோடு நின்றுவிடாமல் டெல்லியில் சென்று மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்' என்று தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!